Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கல்வி உலகம் கணிதத்தில் சிறந்து விளங்கினால் ஏனைய துறைகளில் இலகுவாக தேர்ச்சி பெறலாம்
[08 - March - 2008] [Font Size - A - A - A]
*வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர்

கல்வி உலகம் கணிதத்தில் சிறந்து விளங்கினால் ஏனைய கலைகள் யாவற்றிலும் இலகுவில் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற சிந்தனையில், கல்வி மேம்பாட்டுக்காக தனது சேவைக்காலத்தில், சேவையாற்றியவர் நாகராசா உலகநாதன். அவர் இன்று இளைப்பாறுவது, கல்வியுலகிற்குப் பெரும் இழப்பாகும். இவ்வாறு வடமாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் வே.தி. செல்வரட்ணம் தெரிவித்தார்.

யாழ். கல்வி வலயத்தில் கணித பாடத்திற்கான உதவிக் கல்விப்பணிப்பாளராக சேவையாற்றி ஓய்வுபெறும் நாகராசா உலகநாதனுக்கு கடந்த வெள்ளிக்கிழமை யாழ். கல்வி வலய கணித ஆசிரியர் கழகம் வலயக்கல்விப்பணிமனை கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்த பிரிவுபசார விழாவில் உரையாற்றும் போதே யாழ். கல்வி வலயப் பணிப்பாளரும், மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளருமான வே.தி. செல்வரட்ணம் தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு யாழ்ப்பாண மத்திய கல்லூரி ஆசிரியர் சி. சந்திரகுமார் தலைமைதாங்கினார்.

கல்விப்பணிப்பாளர் வே.தி. செல்வரட்ணம் தொடர்ந்து உரையாற்றுகையில் ஓய்வுபெறும் உலகநாதனிடம் அமைதி நிரம்பிய அறிவு இக்கணிதவியலாளரின் சிறப்பம்சமாகும். வலயக்கல்வியலுவலகப் பெறுபேறுகளில் காரணகர்த்தாக்களில் ஒருவராகவே சேவையில் இருந்துள்ளார். தன்னடக்கமும் நம்பிக்கையும், உடைய அவரிடமிருந்து கற்க வேண்டியவை அதிகமுள்ளது. அவர் ஓய்வுபெற்றாலும் கல்வியுலகுக்கு அவர் சேவையாற்ற வேண்டும் என்றார்.

நல்லூர் கோட்டக் கல்வியதிகாரி என். குணசேகரம் உரையாற்றுகையில், உலகநாதன் தன்னை நாடிவருபவர்களுக்கு உதவுபவராகவே சேவையாற்றியவர். அவரது தொண்டுள்ளம் கல்வியுலகிற்கு பெரும் வரப்பிரசாதமாகும். கீதையின் வாக்கியப்படி தொண்டு செய்வாய் உயர்வடைவாய் என்பதாகவே அவரது பணி அமைந்திருந்தது" என்றார்.

தலைமையுரையாற்றிய சி. சந்திரகுமார் தமதுரையில் உலகநாதன் ஓர் ஆசிரியராக இருந்து பல பதவிகளைப் பெற்று உதவிக் கல்விப்பணிப்பாளராக உயர்ந்தவர். யாரிடத்திலும் பகைமையுணர்வு கொள்ளாதவர். எப்போதும் தனக்கு அடக்கமான மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டவர். எந்தப் பதவியானாலும் அதை நேர்மையாக செய்து பாராட்டப்பட்டவர். கணிதபாட அடைவுமட்டம் உயர்வதற்கு அவரது உழைப்பே மூலதனமாகும். அவர் ஓய்வுபெற்றாலும் அவரிடமுள்ள திறமை, சாதுரியம், அறிவு மேலாண்மை இனி வரும் காலத்திலும் கல்வியுலகிற்குக் கிடைக்க வேண்டும். என்றார்.

யாழ். கல்விவலய ஆசிரிய ஆலோசகர் நா. மகாநாதன் உரையாற்றுகையில், உலகநாதன் உதவிக் கல்விப் பணிப்பாளராக சேவையாற்றினாலும் செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஒரு தந்தையைப் போல வழிகாட்டியாக இருந்தவர். அவர் ஓய்வுபெறுவது என்னைப் பொறுத்தவரையில் கல்வியுலகிற்கு இழப்பாகும் என்றார்.

வைபவத்தில், நன்றி தெரிவித்து உரையாற்றிய விழா நாயகர் நாகராசா உலகநாதன் இன்றைக்கு எனக்கு விழாவெடுத்து கௌரவிக்கும் அனைவரையும் போற்றுவதோடு நில்லாமல் என்னை ஆளாக்கிய என் ஆசிரியர்களுக்கு நான் என்றென்றும் தலைவணங்குகின்றேன் என்றார். வைபவத்தில் பலரும் உரையாற்றினர் விழாவுக்கு முன்னதாக உலகநாதன் தம்பதிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

Email this page Your Opinion Print this page
சென்னை - கொழும்புக்கு இன்று மகளிர் மட்டும் இயக்கும் விமானம்
சிவநேசன் படுகொலைக்கு அரசு கடும் கண்டனம்
ஜனநாயக மரபுகளுக்கு பாதிப்பு நோர்வே கண்டனம்
தேசிய ஊடக கொள்கையை உருவாக்கும் நடவடிக்கை பூர்த்தி அரசு அறிவிப்பு; தணிக்கை நோக்கம் அல்ல; அமைச்சர் யாப்பா
இலங்கைக்கு உதவியளிக்க தயாராக மத்தியஸ்தர் குழு
4 படையினர், 38 புலிகள் வடபகுதி மோதல்களில் பலி
சிவநேசனின் வெற்றிடத்திற்கு சொலமன் எஸ்.சிறில்
சிவநேசன் எம்.பி.க்கு `மாமனிதர்' விருது வழங்கி புலிகளின் தலைவர் பிரபாகரன் கௌரவிப்பு
`மரண வியாபாரி' யென வர்ணிக்கப்பட்ட உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர் விக்ரர் போட் கைது
மகேஸ்வரன் கொலை தொடர்பாக ஹெகலியவிடம் வாக்குமூலம் பதிவு
`பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு'
நுரைச்சோலை, கொத்மலை மின் திட்டங்கள் அமைக்கப்படுமானால் மின் கட்டணம் உயராது
குருவிற்ற பகுதியில் 150 பேருக்கு சிக்குன்குன்யா
உள்ளூராட்சி தேர்தல் களத்தில் அமைச்சரின் கரங்கள் ஓங்கியிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் விசனம்
சிறைச்சாலையில் தாக்கப்பட்டு இறந்த கைதியின் மனைவிக்கு ரூபா 5 இலட்சம் நட்டஈடு வழங்க முடிவு
கல்கிசை பஸ் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி; மே 7 இல் விசாரணை
புதுவித காய்ச்சல் இரு குழந்தைகள் மரணம்
யாழ். மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக மருந்துகள் தட்டுப்பாடு, டாக்டர்கள் பற்றாக்குறை
மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு
முகத்துவாரம் குண்டுவெடிப்பு விசாரணை மார்ச் 12 இல் அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் பணிப்பு
சமையல் எரிவாயுவை தடையின்றி பெற `சிபெட்கோ' நிறுவனத்தினூடாக நடவடிக்கை
சமையல் எரிவாயுவை தடையின்றி பெற `சிபெட்கோ' நிறுவனத்தினூடாக நடவடிக்கை
முன்னாள் பிரதியமைச்சரை கண்டுபிடிக்க புத்தல காட்டுப் பகுதியில் தீவிர தேடுதல்
சிவநேசன் மறைவுக்கு ஈழவேந்தன் அனுதாபம்
கடற்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 26 நாடுகளுடன் இலங்கை உடன்படிக்கை
சிவநேசன் எம்.பி. படுகொலை செய்யப்பட்டமை ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்
இரு ஊடகவியலாளர்கள் உட்பட மூவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது
இலங்கையின் ஊடக சுதந்திரம் தொடர்பான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கை தவறானது
கொம்பனித்தெரு பொலிஸாரால் குடும்பப் பெண்ணொருவர் கைது
காணாமல்போன முன்னாள் பிரதியமைச்சரை தேடிக் கண்டுபிடிப்பதில் பொலிஸார் அசிரத்தை
சிவநேசன் எம்.பி.யின் படுகொலை ஜனநாயக சக்திகளை மீண்டும் கவலையடைய வைத்துள்ளது
விளம்பரமின்றி சமூகப்பணியை முன்னெடுக்கும் ஷ்ரீலங்கா ஆசிரியைகளின் வலையமைப்பு
ஜ.தொ.கா. தலைவர் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
சிவநேசன் எம்.பி.யின் அபிலாசைகள் விரைவில் எம்மால் வென்றெடுக்கப்படும்
பிலிமத்தலாவை வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி
தனது எம்.பி.க்களையே படுகொலை செய்யும் உலகிலுள்ள ஒரேயொரு நாடு இலங்கையே
விடுதலைப் புலிகளுக்காக கேரளாவில் தயாரிக்கப்பட்ட படகு கைப்பற்றப்பட்டது
ஜே.வி.பி.க்கே இல்லாத போது தமிழ் மக்கள் எவ்விதம் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ள முடியும்?
ஆட்கடத்தல்களை பொலிஸாரே செய்வதாக சகல இன மக்களிடமும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது
கல்வி உலகம் கணிதத்தில் சிறந்து விளங்கினால் ஏனைய துறைகளில் இலகுவாக தேர்ச்சி பெறலாம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com