அட்டன் ஸ்டெதன் தோட்டத்தின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் மோகன்ராஜ் வெட்டுக்காயங்களுக்குள்ளாகி நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மாற்றுத் தொழிற்சங்கமொன்றைச் சேர்ந்தவர்களே இவரை வெட்டியதாக பாதிக்கப்பட்டவர் சார்பில் அட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வெட்டு சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு தொழிற்சங்க ஆதரவாளர்களுக்கிடையில் கைகலப்பொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பாக ஸ்டெதன் தோட்டத்துக்கு நேரடியாக விஜயம் செய்த ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளர் பிரபா கணேசன் சம்பவத்தில் பாதிப்படைந்தவரை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குச் சென்று பார்வையிட்டார்.