காணாமல்போன முன்னாள் பிரதியமைச்சர் ஜயசுந்தர விஜயக்கோனை கண்டுபிடிப்பதற்காக மொனராகல புத்தல காட்டுப் பகுதியில் தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த புதன்கிழமை இரவு புத்தல பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து ஜயசுந்தர விஜயக்கோன் காணாமல்போனார். இதுவரை இவர் பற்றிய தகவல்களெதுவும் கிடைக்கவில்லை.
இவரைக் கண்டுபிடிப்பதற்காக இரு விஷேட பொலிஸ் குழுக்களை ஊவா மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமித்துள்ளார்.
இந்த நிலையில் மொனராகல புத்தல காட்டுப் பகுதியில் தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மொனராகல பொலிஸ் அத்தியட்சர் விஜித டி கோமசானு தெரிவித்துள்ளார்.
நாற்பதுக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய பொலிஸார் கடந்த இரு நாட்களாக இந்தத் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
இவர் காணாமல்போனது தொடர்பாக விசாரணைகளும் நடைபெற்று வருகின்றன.