|
இரத்தினபுரி குருவிற்ற பகுதியிலுள்ள ஏரத்ன மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இதுவரை 150 சிக்குன்குன்யா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
திடீரென ஏற்பட்ட காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் போது இவர்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்ததிலிருந்தே சிக்குன்குன்யா நோய் பீடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |