Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சிவநேசன் எம்.பி.க்கு `மாமனிதர்' விருது வழங்கி புலிகளின் தலைவர் பிரபாகரன் கௌரவிப்பு
[08 - March - 2008] [Font Size - A - A - A]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனுக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான "மாமனிதர்" விருது வழங்கி விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கௌரவித்துள்ளார்.

இது தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

"தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் ஒருவரை இன்று சிங்களம் அழித்துவிட்டது. தமிழினக் கொலைப் பரிமாணத்தின் உச்சமாக திட்டமிட்ட இந்தக் கோரக்கொலை நிகழ்ந்திருக்கிறது. சிங்கள அரச பயங்கரவாதத்தின் அசிங்கமான வடிவமாக வன்னி மண்ணிலே இந்தக் கொடுமை அரங்கேறியிருக்கிறது.

கிட்டினன் சிவநேசன் சுயநலம் கருதாது நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் செயற்பட்ட தனித்துவமான மனிதர். உயர்ந்த உள்ளம் கொண்ட எளிமையான மனிதர். புனிதமான அரசியலாளர். தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைத்தவர். அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்ளும் ஒரு உயரிய பண்பாளர். இவர் தமிழீழ மண்ணின் விடிவையும் தமிழீழ மக்களின் விடுதலையையும் தனது வாழ்வின் இலட்சியமாக வரித்துக் கொண்டவர்.

தமிழ் மக்கள் தமது சொந்த தாயக மண்ணில் இன்னல்கள் நீங்கி, இடர்கள் அகன்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழ வேண்டும் என ஆவல் கொண்டவர். தமிழீழ மண்ணை ஆழமாக நேசித்தவர். அந்த மண் ஒரு சுதந்திர தேசமாக மலர்வதைக் காணத்துடித்தவர். இந்தத் துடிப்பில் உயிர்ப்புப்பெற்று எமது விடுதலை இயக்கத்தையும் அதன் அரசியல் இலட்சியத்தையும் அதனை அடைவதற்கு நாம் நெறித்துள்ள போராட்டப் பாதையையும் முழுமையாக ஏற்றுப் பெரும் விடுதலைப் பணியாற்றியவர்.

யாழ். மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றப் பெரும் பொறுப்பைச் சுமந்தவாறு உலகெங்கும் அலைந்து எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நியாயம் தேடினார். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி எமது போராட்டத்திற்கு ஆதரவாக மக்களை அணி திரட்டினார். சிங்கள அரசும் அதன் ஆக்கிரமிப்புப் படைகளும் எமது மண்ணில் நிகழ்த்தும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் உலகத்திற்கும் ஊடகங்களுக்கும் தெளிவாக எடுத்துக் கூறினார். சிங்களப் படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அஞ்சா நெஞ்சுடன் அநீதியை எதிர்த்துப் போராடினார். கடும் உழைப்பாலும் செயற்றிறனாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அன்னார் ஆற்றிய அரும்பணி அளப்பரியது.

கிட்டினன் சிவநேசனின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்ச்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்".

Email this page Your Opinion Print this page
சென்னை - கொழும்புக்கு இன்று மகளிர் மட்டும் இயக்கும் விமானம்
சிவநேசன் படுகொலைக்கு அரசு கடும் கண்டனம்
ஜனநாயக மரபுகளுக்கு பாதிப்பு நோர்வே கண்டனம்
தேசிய ஊடக கொள்கையை உருவாக்கும் நடவடிக்கை பூர்த்தி அரசு அறிவிப்பு; தணிக்கை நோக்கம் அல்ல; அமைச்சர் யாப்பா
இலங்கைக்கு உதவியளிக்க தயாராக மத்தியஸ்தர் குழு
4 படையினர், 38 புலிகள் வடபகுதி மோதல்களில் பலி
சிவநேசனின் வெற்றிடத்திற்கு சொலமன் எஸ்.சிறில்
சிவநேசன் எம்.பி.க்கு `மாமனிதர்' விருது வழங்கி புலிகளின் தலைவர் பிரபாகரன் கௌரவிப்பு
`மரண வியாபாரி' யென வர்ணிக்கப்பட்ட உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர் விக்ரர் போட் கைது
மகேஸ்வரன் கொலை தொடர்பாக ஹெகலியவிடம் வாக்குமூலம் பதிவு
`பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு'
நுரைச்சோலை, கொத்மலை மின் திட்டங்கள் அமைக்கப்படுமானால் மின் கட்டணம் உயராது
குருவிற்ற பகுதியில் 150 பேருக்கு சிக்குன்குன்யா
உள்ளூராட்சி தேர்தல் களத்தில் அமைச்சரின் கரங்கள் ஓங்கியிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் விசனம்
சிறைச்சாலையில் தாக்கப்பட்டு இறந்த கைதியின் மனைவிக்கு ரூபா 5 இலட்சம் நட்டஈடு வழங்க முடிவு
கல்கிசை பஸ் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி; மே 7 இல் விசாரணை
புதுவித காய்ச்சல் இரு குழந்தைகள் மரணம்
யாழ். மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக மருந்துகள் தட்டுப்பாடு, டாக்டர்கள் பற்றாக்குறை
மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு
முகத்துவாரம் குண்டுவெடிப்பு விசாரணை மார்ச் 12 இல் அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் பணிப்பு
சமையல் எரிவாயுவை தடையின்றி பெற `சிபெட்கோ' நிறுவனத்தினூடாக நடவடிக்கை
சமையல் எரிவாயுவை தடையின்றி பெற `சிபெட்கோ' நிறுவனத்தினூடாக நடவடிக்கை
முன்னாள் பிரதியமைச்சரை கண்டுபிடிக்க புத்தல காட்டுப் பகுதியில் தீவிர தேடுதல்
சிவநேசன் மறைவுக்கு ஈழவேந்தன் அனுதாபம்
கடற்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 26 நாடுகளுடன் இலங்கை உடன்படிக்கை
சிவநேசன் எம்.பி. படுகொலை செய்யப்பட்டமை ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்
இரு ஊடகவியலாளர்கள் உட்பட மூவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது
இலங்கையின் ஊடக சுதந்திரம் தொடர்பான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கை தவறானது
கொம்பனித்தெரு பொலிஸாரால் குடும்பப் பெண்ணொருவர் கைது
காணாமல்போன முன்னாள் பிரதியமைச்சரை தேடிக் கண்டுபிடிப்பதில் பொலிஸார் அசிரத்தை
சிவநேசன் எம்.பி.யின் படுகொலை ஜனநாயக சக்திகளை மீண்டும் கவலையடைய வைத்துள்ளது
விளம்பரமின்றி சமூகப்பணியை முன்னெடுக்கும் ஷ்ரீலங்கா ஆசிரியைகளின் வலையமைப்பு
ஜ.தொ.கா. தலைவர் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
சிவநேசன் எம்.பி.யின் அபிலாசைகள் விரைவில் எம்மால் வென்றெடுக்கப்படும்
பிலிமத்தலாவை வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி
தனது எம்.பி.க்களையே படுகொலை செய்யும் உலகிலுள்ள ஒரேயொரு நாடு இலங்கையே
விடுதலைப் புலிகளுக்காக கேரளாவில் தயாரிக்கப்பட்ட படகு கைப்பற்றப்பட்டது
ஜே.வி.பி.க்கே இல்லாத போது தமிழ் மக்கள் எவ்விதம் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ள முடியும்?
ஆட்கடத்தல்களை பொலிஸாரே செய்வதாக சகல இன மக்களிடமும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது
கல்வி உலகம் கணிதத்தில் சிறந்து விளங்கினால் ஏனைய துறைகளில் இலகுவாக தேர்ச்சி பெறலாம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com