Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தேசிய ஊடக கொள்கையை உருவாக்கும் நடவடிக்கை பூர்த்தி அரசு அறிவிப்பு; தணிக்கை நோக்கம் அல்ல; அமைச்சர் யாப்பா
[08 - March - 2008] [Font Size - A - A - A]
எம்.ஏ.எம்.நிலாம்

பொறுப்பு வாய்ந்த ஊடக கலாசாரத்தை தோற்றுவிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் தேசிய ஊடக கொள்கையொன்றை உருவாக்கும் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இப்புதிய கொள்கை கொண்டுவரப்படுவதன் மூலம் ஊடகத்துறை மீதோ, ஊடகவியலாளர் மீதோ கட்டுப்பாடுகள், தணிக்கைகளை அரசு மேற்கொள்வதாகக் கருதிவிடக்கூடாது எனவும் அமைச்சர் யாப்பா சுட்டிக்காட்டினார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் அநுர யாப்பா மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அமைச்சர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

"பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இலங்கையில் ஊடக சுதந்திரம் காத்திரமாகப் பேணப்பட்டு வருகின்றது. ஊடகத்துறைக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பூரண சுதந்திரம் இருக்கும் நாடாகவே எமது நாடு காணப்படுகின்றது.

இங்குள்ள பெரும்பாலான ஊடகங்கள் கூடுதலாக அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிப்பவையாகவே காணப்படுகின்றன.

அதையிட்டு அரசு கவலைப்படவில்லை. விமர்சிக்கும் உரிமை ஊடகத்துறைக்கு தாராளமாக வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில ஊடகங்கள் தமக்கிருக்கும் சுதந்திரத்தையும் , உரிமையையும் தவறாகப் பயன்படுத்த முனைகின்றன. இது ஜனநாயகப் பாரம்பரியத்துக்கு விரோதமானதாகும். எனவே, சர்வதேச ஊடகக் கோட்பாடுகளுக்கமைவாக அரசாங்கம் தேசிய ஊடகக் கொள்கையொன்றை வகுப்பதற்கு முடிவு செய்துள்ளது. இந்தத் தேசியக் கொள்கையை வகுப்பதில் ஏற்கனவே, பெரும் பகுதி பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆரம்பத்திட்ட யோசனை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நேர்மையானதும் பொறுப்பு வாய்ந்ததுமான ஊடக கலாசாரமொன்றை நாட்டில் தோற்றுவிப்பதே இதன் பிரதான நோக்கமாகும். இத்தேசியக் கொள்கையின் ஊடாக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதோ, ஊடக சுதந்திரத்தை நசுக்குவதோ அரசின் நோக்கமாக இருக்காது.

தற்போது நாட்டில் பூரண ஊடக சுதந்திரம் காணப்படுகிறது. இதனை மேலும், வலுப்படுத்தி பலம் வாய்ந்ததொரு ஊடகக் கலாசாரத்தை தோற்றுவிப்பதே அரசின் நோக்கமாகும்.

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகிந்த சிந்தனையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முக்கியமான உறுதிப்பாடுகளில் ஒன்றான ஆரோக்கியமான ஊடகக் கலாசாரத்தை தோற்றுவிக்கும் திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டே இந்த தேசிய ஊடகக் கொள்கை தயாரிக்கப்படுகின்றது" என்று அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.

இதேசமயம் சமீபகாலமாக ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்டுவரும் அச்சுறுத்தல்கள், தாக்குதல்களுக்கு அரசாங்கம் நியாயமான தீர்வெதனையும் காணவில்லையே என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த அமைச்சர் அநுர யாப்பா கூறியதாவது;

ஊடகவியலாளர்கள் மீது அச்சுறுத்தல், தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. கடந்த காலத்தில் இடம்பெற்ற தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் குறித்து விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விசாரணை அறிக்கைகள் கிடைத்ததும் நீதியான நடவடிக்கை எடுக்க ஒரு போதும் தயக்கம் காட்டமாட்டாது.

அமைச்சர் மேர்வின் சில்வா மீதான விசாரணைக்கு என்ன நடந்தது எனக் கேட்டபோது பதிலளித்த அமைச்சர்; சுதந்திரக் கட்சி நியமித்த குழுவின் விசாரணைகள் முடிவடையும் தறுவாயில் உள்ளன. முதற்கட்ட அறிக்கை என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதனை ஆராய்ந்த பின்னரே எதுவும் கூறமுடியுமெனக் கூறினார். ஆனால், அரசாங்கம் தவறிழைத்த எவரையும் பாதுகாக்க முற்படாதென அமைச்சர் யாப்பா உறுதியளித்தார்.

அரசாங்கம் எதனையும் மூடி மறைத்து காலம் கடத்துவதாக எண்ண வேண்டாமெனவும் அமைச்சர் யாப்பா கேட்டுக் கொண்டார்.

Email this page Your Opinion Print this page
சென்னை - கொழும்புக்கு இன்று மகளிர் மட்டும் இயக்கும் விமானம்
சிவநேசன் படுகொலைக்கு அரசு கடும் கண்டனம்
ஜனநாயக மரபுகளுக்கு பாதிப்பு நோர்வே கண்டனம்
தேசிய ஊடக கொள்கையை உருவாக்கும் நடவடிக்கை பூர்த்தி அரசு அறிவிப்பு; தணிக்கை நோக்கம் அல்ல; அமைச்சர் யாப்பா
இலங்கைக்கு உதவியளிக்க தயாராக மத்தியஸ்தர் குழு
4 படையினர், 38 புலிகள் வடபகுதி மோதல்களில் பலி
சிவநேசனின் வெற்றிடத்திற்கு சொலமன் எஸ்.சிறில்
சிவநேசன் எம்.பி.க்கு `மாமனிதர்' விருது வழங்கி புலிகளின் தலைவர் பிரபாகரன் கௌரவிப்பு
`மரண வியாபாரி' யென வர்ணிக்கப்பட்ட உலகின் முன்னணி ஆயுத வர்த்தகர் விக்ரர் போட் கைது
மகேஸ்வரன் கொலை தொடர்பாக ஹெகலியவிடம் வாக்குமூலம் பதிவு
`பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிரை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு'
நுரைச்சோலை, கொத்மலை மின் திட்டங்கள் அமைக்கப்படுமானால் மின் கட்டணம் உயராது
குருவிற்ற பகுதியில் 150 பேருக்கு சிக்குன்குன்யா
உள்ளூராட்சி தேர்தல் களத்தில் அமைச்சரின் கரங்கள் ஓங்கியிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் விசனம்
சிறைச்சாலையில் தாக்கப்பட்டு இறந்த கைதியின் மனைவிக்கு ரூபா 5 இலட்சம் நட்டஈடு வழங்க முடிவு
கல்கிசை பஸ் குண்டுவெடிப்பு சந்தேக நபர்கள் பிணையில் செல்ல அனுமதி; மே 7 இல் விசாரணை
புதுவித காய்ச்சல் இரு குழந்தைகள் மரணம்
யாழ். மாவட்டத்தில் பாரிய பிரச்சினையாக மருந்துகள் தட்டுப்பாடு, டாக்டர்கள் பற்றாக்குறை
மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு
முகத்துவாரம் குண்டுவெடிப்பு விசாரணை மார்ச் 12 இல் அறிக்கை சமர்ப்பிக்க நீதிவான் பணிப்பு
சமையல் எரிவாயுவை தடையின்றி பெற `சிபெட்கோ' நிறுவனத்தினூடாக நடவடிக்கை
சமையல் எரிவாயுவை தடையின்றி பெற `சிபெட்கோ' நிறுவனத்தினூடாக நடவடிக்கை
முன்னாள் பிரதியமைச்சரை கண்டுபிடிக்க புத்தல காட்டுப் பகுதியில் தீவிர தேடுதல்
சிவநேசன் மறைவுக்கு ஈழவேந்தன் அனுதாபம்
கடற்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் 26 நாடுகளுடன் இலங்கை உடன்படிக்கை
சிவநேசன் எம்.பி. படுகொலை செய்யப்பட்டமை ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்
இரு ஊடகவியலாளர்கள் உட்பட மூவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது
இலங்கையின் ஊடக சுதந்திரம் தொடர்பான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கை தவறானது
கொம்பனித்தெரு பொலிஸாரால் குடும்பப் பெண்ணொருவர் கைது
காணாமல்போன முன்னாள் பிரதியமைச்சரை தேடிக் கண்டுபிடிப்பதில் பொலிஸார் அசிரத்தை
சிவநேசன் எம்.பி.யின் படுகொலை ஜனநாயக சக்திகளை மீண்டும் கவலையடைய வைத்துள்ளது
விளம்பரமின்றி சமூகப்பணியை முன்னெடுக்கும் ஷ்ரீலங்கா ஆசிரியைகளின் வலையமைப்பு
ஜ.தொ.கா. தலைவர் வெட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
சிவநேசன் எம்.பி.யின் அபிலாசைகள் விரைவில் எம்மால் வென்றெடுக்கப்படும்
பிலிமத்தலாவை வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலி
தனது எம்.பி.க்களையே படுகொலை செய்யும் உலகிலுள்ள ஒரேயொரு நாடு இலங்கையே
விடுதலைப் புலிகளுக்காக கேரளாவில் தயாரிக்கப்பட்ட படகு கைப்பற்றப்பட்டது
ஜே.வி.பி.க்கே இல்லாத போது தமிழ் மக்கள் எவ்விதம் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ள முடியும்?
ஆட்கடத்தல்களை பொலிஸாரே செய்வதாக சகல இன மக்களிடமும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது
கல்வி உலகம் கணிதத்தில் சிறந்து விளங்கினால் ஏனைய துறைகளில் இலகுவாக தேர்ச்சி பெறலாம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com