தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கே.சிவநேசனின் படுகொலையை நோர்வே அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
சிவநேசன் எம்.பி. மற்றும் அவரது வாகன சாரதியான பெரியண்ணன் மகேஸ்வரராஜா இருவரும் வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலொன்றில் கொல்லப்பட்டதைக் கண்டித்து கவலை வெளியிட்டு அறிக்கையொன்றினை விடுத்திருக்கும் நோர்வே அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான தாக்குதலானது இலங்கையின் ஜனநாயக மரபுகளை பாதிப்பதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இலங்கையில் தொடர்ந்து வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர முரண்பாடுகளுக்கு அரசியல் தீர்வொன்று முக்கியமெனவும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் சிவநேசன் எம்.பி. மற்றும் சாரதியான மகேஸ்வரராஜா இருவரினதும் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நோர்வேயின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.