சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களே இயக்கும் விமானத்தை `எயார் இந்தியா' நிறுவனம் இன்று சனிக்கிழமை அறிமுகப்படுத்துகிறது.
சென்னையிலிருந்து கொழும்புக்கும், மீண்டும் கொழும்பிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படும் இந்த விமானத்தில் (ஐ.சி. 573, 574) விமானிகள், பணிப் பெண்கள் என அனைவரும் பெண்களே இடம்பெற உள்ளனர்.
விமானத்தை விமானி எம். தீபாவும், உதவி விமானி என்.ஆர். வேதாவும் இயக்குகின்றனர்.