Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Saturday, March 08, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து விளையாடிய மூன்று மாதகாலமும் மிகவும் கடினமாயிருந்தது
[08 - March - 2008] [Font Size - A - A - A]
* ஹர்பஜன் கூறுகிறார்

அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து விளையாடிய 3 மாதமும் தனக்கு மிகவும் கடினமான காலமாக இருந்ததாக ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை யார் மறந்தாலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கால் மட்டும் மறக்க முடியாது. ஏனெனில், இந்தத் தொடரில் நிறையப் பிரச்சினைகளை சந்தித்தவர் அவர் தான். அங்கிருந்து இந்தியா புறப்படும் முன் அளித்த பேட்டியில் கூறியதாவது;

கடந்த 3 மாத காலமாக அவுஸ்திரேலியாவில் பல விதமான பிரச்சினைகளை எதிர்கொண்டேன். இந்த 3 மாதமும் எனக்கு மிகவும் கடினமான காலமாக அமைந்தது. கிரிக்கெட் வீரராக மட்டுமன்றி, ஒரு மனிதனாக இங்கு நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொண்டேன்.

என்னை வெறுப்பேற்ற அவுஸ்திரேலிய ரசிகர்கள் கேலிக்குரல் எழுப்பினார்கள். ஆனால், இதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களின் இத்தகைய செய்கை அதிகரிக்க அதிகரிக்க நான் மேன் மேலும் சிறப்பாக செயல்பட்டேன். களத்தில் எனது நடத்தை பற்றி அவுஸ்திரேலிய பத்திரிகைகளும் அவுஸ்திரேலிய வீரர்களும் விமர்சித்தபோது, எனக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படவில்லை. ஏனெனில், நான் நட்பு ஏற் படுத்திக் கொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு வரவில்லை. எனவே இங்கு சாதாரணமாக விளையாடி விட்டு போக முடியாது.

அவுஸ்திரேலிய வீரர் ஹைடன் (ஹர்பஜன் சிங் வெறுக்கத்தக்க வீரர் என்று கூறினார்) என்னை வெளிப்படையாக விமர்சித்தார். அவரை அந்த மாதிரி சொல்ல எது தூண்டியது என்பது தெரியவில்லை. அவர் என்னை விடவும் கிரிக்கெட்டை விடவும் தன்னை பெரிய மனிதராக நினைத்துக் கொள்கிறார். நானும் வெளிப்படையாக எதுவும் சொல்லியிருக்க முடியும். ஆனால், அதை நான் விரும்பவில்லை. களத்தில் அவருக்கு பதிலளித்திருக்கிறேன் என்றார்.

Email this page Your Opinion Print this page
இந்திய வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 58 இலட்சம் ரூபா அன்பளிப்பு
ரசிகர்களின் பாராட்டும் ஆதரவும் அணியின் எதிர்கால வெற்றிகளுக்கு வழிவகுக்கும்
அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து விளையாடிய மூன்று மாதகாலமும் மிகவும் கடினமாயிருந்தது
இலங்கைத் தொடருக்கான மேற்கிந்திய அணிக் கப்டனாக கிறிஸ்கெய்ல் நியமனம்
தென் ஆபிரிக்காவுடனான முதல் டெஸ்டில் இந்திய அணியில் சகீர்கான் இல்லை?
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com