மலேசியாவில் தொழில்வாய்ப்பு பெற்றுச் சென்ற பி.உதயகுமார் என்ற 32 வயது குடும்பத்தவர் அங்கு கொலை செய்யப்பட்டு சடலம் விமான மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.
2007 ஜூன் 22 ஆம் திகதி இவர் மலேசியாவுக்கு சென்றதாகவும் அங்குள்ள இந்திய பிரஜை ஒருவரால் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டதாகவும் நீர்கொழும்பு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற மரணவிசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
வவுனியா யோகபுரத்தைச் சேர்ந்த இவரின் மரண விசாரணை நீர்கொழும்பு வைத்தியசாலையில் மரண விசாரணை அதிகாரி ஜயந்த விக்கிரமரட்ண முன்னிலையில் நடைபெற்றது.
இவரின் மனைவி சசிகலா சாட்சியம் அளித்தார். சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.சன்ன பெரேரா பிரேத பரிசோதனையை மேற்கொண்டிருந்தார்.
கூரிய ஆயுதத்தினால் ஏற்பட்ட காயம், இரத்தப்பெருக்கு வேறு காயங்களால் கிருமி உட்புகுந்தமை என்பனவற்றால் மரணம் சம்பவித்தது என்று தனது மருத்துவ அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
கோலாம்பூர் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்ட சடலம் பெப்ரவரி 23 ஆம் திகதி விமானமூலம் இங்கு கொண்டுவரப்பட்டது.