போலி கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனங்களைப் பெற்ற 61 பேர், பரிசீலனையின்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாகாண கல்வி அமைச்சிற்கு கிடைத்த தகவல்களையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின்போதே, மேற்கண்ட 61 பேர் போலியான கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து ஆசிரியர் நியமனங்களைப் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட 61 பேரும், கடமைக்கும் செல்லாமலிருந்து வருகின்றனர். இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை, மாகாண தமிழ்க்கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.
நுவரெலியா, கண்டி, மாத்தளை ஆகிய மூன்று மாவட்டங்களின் பெருந்தோட்டப் பாடசாலை ஆசிரிய நியமனங்கள் பெற்றவர்கள் 1,999 பேர் உட்பட 3,179 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
மத்திய மாகாணத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசீலனையின்போதே, போலியான கல்விச் சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட 61 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.