|
இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் ஜேர்மன் நாட்டுக்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, இன்று ஞாயிற்றுக்கிழமை ஜேர்மன் பேர்லின் நகரில் ஏற்பாடாகியிருக்கும் பல்வேறு சுற்றுலாத்துறை தொடர்பான நிகழ்வுகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.
ஜேர்மனில் உள்ள பேர்லின் நகரில் சர்வதேச மட்டத்தில் 180 நாடுகள் கலந்துக் கொள்ளும் சர்வதேச வர்த்தக மற்றும் சுற்றுலாத்துறை கண்காட்சியில் கலந்து கொள்ள இலங்கை சார்பாக பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் கடந்த 5 ஆம் திகதி சுற்றுலாத்துறை சபையின் அதிகாரிகள், ஷ்ரீலங்கா எயார் லைன்ஸ், தேயிலை சபை, ஆயுர்வேத மற்றும் பிரபல ஹோட்டல் முகாமைத்துவ அதிகாரிகள் குழு ஜேர்மன் நாட்டுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. |