ஊர்காவற்றுறை நாரந்தனை பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு சமூகசேவையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
நாரந்தனை வடக்கு தம்பாட்டியைச் சேர்ந்த இரத்தினம் வடிவேல் (62 வயது) என்ற குடும்பஸ்தரே வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளொன்றில் இவரது வீட்டிற்குச் சென்ற ஆயுதபாணிகளே இவரை வீட்டிற்கு வெளியே அழைத்து, சுட்டுக்கொன்றுவிட்டுச் சென்றுள்ளனர்.
இவரது சடலம் பின்னர் ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.