Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வன்னியெங்கும் விசேட ஊர்தியில் சிவநேசன் எம்.பி.யின் பூதவுடல்
[09 - March - 2008] [Font Size - A - A - A]
* ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுசென்று அஞ்சலி

வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. மாமனிதர் கி. சிவநேசனின் பூதவுடலுக்கு நேற்று சனிக்கிழமை வன்னியில் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கனகராயன்குளம் மன்னகுளம் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணியினரின் கிளைமோர் தாக்குதலில் சிவநேசன் எம்.பி.யும் அவரது வாகனச் சாரதியும் கொல்லப்பட்டனர்.

சிவநேசன் எம்.பி.யின் பூதவுடல் மல்லாவியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு நேற்றுக் காலை வன்னியின் சகல பகுதிகளுக்கும் விசேட ஊர்தியொன்றின் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

நேற்றுக் காலை முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் இவரது பூதவுடல் சென்றபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு தங்கள் இறுதி அஞ்சலியை கண்ணீர்மல்க செலுத்தினர்.

இதன் போது பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலிக் கூட்டங்களும் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் இந்தக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றினர். இரவது பூதவுடல் தாங்கிய ஊர்தி செல்லுமிடமெங்கும் வீதிகளின் இரு மருங்கிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பூத்தூவி தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.

இவரது மறைவையொட்டி வன்னியின் சகல பகுதிகளிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டும் வாழை, தோரணங்கள் கட்டப்பட்டும் முக்கிய சந்திகளில் ஒலிபெருக்கிகள் மூலம் சோககீதங்கள் இசைக்கப்பட்டும் வருகின்றன.

நேற்றிரவு இவரது பூதவுடல் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது. இன்று நண்பகல் மீண்டும் மல்லாவிக்கு எடுத்துச் செல்லப்பட்டும் இவரது பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு மாலை 4 மணியளவில் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடைபெற்று இறுதிக் கிரியைகள் நடைபெறும்.

Email this page Your Opinion Print this page
லூயிஸ் ஆர்பர் பதவி விலகுவதையிட்டு ஐ.நா. செயலாளர் நாயகம் மனவருத்தம்
சர்வதேச மனிதாபிமான சட்டம் `தெரிவு' அல்ல; அவசியமான கடப்பாடு
வன்னியெங்கும் விசேட ஊர்தியில் சிவநேசன் எம்.பி.யின் பூதவுடல்
அந்துருவெல்ல வாகன விபத்தில் 4 பேர் உயிரிழப்பு, 20 பேர் காயம்
புலிகளின் பகுதிகளை நோக்கி கடுமையான ஷெல் தாக்குதல்
நாரந்தனை தம்பாட்டியில் சமூக சேவையாளர் சுட்டுக்கொலை
இந்தியாவை விமர்சிப்பதன் மூலம் ஜே.வி.பி. தவறிழைப்பதாக சுட்டிக்காட்டுகிறார் பசில்
படையினர், அதிகாரிகள், கண்காணிப்பாளர்களால் நிரம்பிவழிகிறது மட்டக்களப்பு மாவட்டம்
62 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடிப்பு
தமிழக மீனவர் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு இந்தியப் பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
ஜேர்மனில் சுற்றுலா கண்காட்சி பைஸர் முஸ்தபா பங்கேற்பு
இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தின் மேம்பாட்டுக்கு நோர்வே தொடர்ந்து உதவும்
அக்கரைப்பற்றில் சுற்றிவளைத்து வீடுவீடாக தீவிர தேடுதல்
மலேசியா தேர்தல் அமைச்சர் சாமிவேலு தோல்வி
சிவநேசன் எம்.பி. மீதான படுகொலைச் சம்பவம் டென்மார்க் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் கண்டனம்
புத்தலவில் கிளைமோர் தாக்குதல் இராணுவ வீரர் பலி; இருவர் படுகாயம்
மன்னாரில் இரு நாள் மோதலில் 22 படையினர் பலி; 72 படையினர் காயம்
ஆசிரிய நியமனத்திற்கு போலி கல்விச் சான்றிதழ் வழங்கிய 61 பேர் மீது நடவடிக்கை
மலேசியாவில் கொல்லப்பட்ட வவுனியா வாசியின் சடலம் விமான மூலம் இலங்கைக்கு அனுப்பிவைப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com