Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Sunday, March 09, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
அதிபர்கள் ஆசிரியர்களைப் பாராட்டும் வைபவம் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றபோது ஆசிரிய ஆலோசகர் கே.உதயகுமாருக்கு கவிச்சிகரம் என்னும் கௌரவப்பட்டம் அளிக்கப்பட்டது. வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி. வீ.ஆர்.ஏ. ஓஸ்வெல்ட் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி என்.மாணிக்கவாசகத்திற்கு `புலமைச்சுடர்' என்னும் பட்டத்தை வெளிக்குளம் வித்தியாலய அதிபர் திருமதி என்.நடராசா வழங்கினார். வலயக் கல்விப் பணிப்பாளருக்கு `வித்தியா மணி' பட்டம் வழங்கப்பட்டது. அதிபர் திருமதி அன்ரன் சோமராசா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அருகில் பீடாதிபதி கே.பேர்னாட் காணப்படுகிறார்.
மகாசிவராத்திரி தினத்தை அடுத்து வெள்ளிக்கிழமை திருகோணமலை கோணேஸ்வராலயத்தில் இருந்து மாதுமையம்பாள் சமேதராக கோணேசப் பெருமான் திருமலை நகர்வலம் வந்து அருள்பாலிப்பதை இங்கு காணலாம்.
அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் 2007 ஆம் ஆண்டு தொழில்நுட்ப பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று அட்டன் தொண்டமான் தொழிற் பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்றது. இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஈடோரே ஹட்ரீம் , இ.தொ.கா.வின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் , இ.தொ.கா.வின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம் ஆகியோர் உரையாற்றுவதையும் பிரமுகர்கள் , உத்தியோகத்தர்கள் , மாணவர்கள் அமர்ந்திருப்பதையும் இங்கு காணலாம்.
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com