Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Articles
அறிவுசார் பொருளாதார முறையின் சில பரிமாணங்கள்
[01 - April - 2008] [Font Size - A - A - A]
பேராசிரியர் சோ.சந்திரசேகரன்

புதிய நூற்றாண்டில் உருவாகிவரும் பொருளாதார முறைகள் அறிவைப் பிரதான வளமாகக் கொண்டு வளர்ச்சி பெறும்; வழமையான உற்பத்திக் காரணிகளான நிலம், முயற்சி, மூலதனம், உழைப்பு என்பனவற்றோடு அறிவும் ஒரு பிரதான உற்பத்திக் காரணியாக உருவெடுத்துள்ளது என்ற கருத்தைச் சென்ற நூற்றாண்டின் எதிர்காலவியல் மற்றும் முகாமைத்துவத்துறை நிபுணர் பீட்டர் டிரக்டர் எடுத்துக் கூறி இருந்தார். தற்போது உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மட்டங்கள் வெவ்வேறு அளவில் இருந்தபோதிலும் சகல உலக நாடுகளும் அறிவை மையப்படுத்திய பொருளாதார முறைகளை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட வேண்டும்; இல்லாவிடில் வளர்முக நாடுகளுக்கும் செல்வந்த நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி விரிவடையும் சாத்தியம் உண்டு என அறிஞர்கள் கருதுகின்றனர். அறிவார்ந்த பொருளாதார முறைகளை ஆசிய வளர்முக நாடுகளில் எவ்வாறு கட்டி எழுப்புவது? அபிவிருத்திக்கான உபாயங்கள் என்ன? என்ற தலைப்பில் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி தென்கொரியத் தலைநகர் சியோல் (Seoel) ஒரு கருத்தரங்கை உலக வங்கி நிறுவகம் ஒழுங்கு செய்திருந்தது. கொரியாவின் பொதுக் கொள்கை, முகாமைத்துவக் கற்கைக்கான நிறுவகத்தின் உதவியுடன் இக்கருத்தரங்கு நடைபெற்றது.

உலக வங்கியின் உயர் அதிகாரிகளும் கொரிய நிறுவகத்தின் தலைமை அதிகாரிகளும் கொரியத் திட்டமிடல் அமைச்சர்களும் கலந்துகொண்ட இக்கருத்தரங்கில் மலேசியா, மங்கோலியா, இந்தோனேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ், கம்போடியா, சீனா, தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், லாவோஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஆசியாவின் வளர்முக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கருத்தரங்கில் ஆராயப்பட்ட விடயங்கள் வளர்ச்சியடைந்த நாடுகளும் வளர்முக நாடுகளும் செல்ல வேண்டிய பாதை, சென்றுகொண்டிருக்கும் பாதை என்பன பற்றியன. புதிய அபிவிருத்தி உபாயங்கள் என்ற முறையில் `அறிவார்ந்த பொருளாதார முறைகளைக்' கட்டியெழுப்புதல், கொரியா நாடு எவ்வாறு அறிவார்ந்த பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடிந்தது? இத்துறையில் அயர்லாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் அனுபவங்கள் என்னும் விடயங்கள் ஆராயப்பட்டன.

இக்கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்ட விடயங்கள், இலங்கை போன்ற வளர்முக நாடுகள் எதிர்காலத்தில் எவ்வாறு தமது பொருளாதார முறைகளை அறிவுசார் பொருளாதாரங்களாக மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை எடுத்துக் கூறின.

* இன்று உருவாகியுள்ள புதிய கருத்தாக்கங்களாவன; தகவல் சமூகம், கற்கும் சமூகம், பின்கைத்தொழில் சமூகம், அறிவுசார் பொருளாதாரம், அறிவுசார் ஊழியர்கள், அறிவுசார் நிறுவனங்கள், புலமைசார் மூலதனம் (Intellectual capital) என்பனவாகும். இக்கருத்தாக்கங்கள் உலகம் எங்கே செல்கின்றது என்பதை விளக்கும்.

* அறிவுசார் பொருளாதாரம் என்பது பொருளாதார வளர்ச்சியில் பல்வேறு மட்டங்களில் உள்ள நாடுகளும் அறிவு, புத்தாக்கம் தொடர்பான கொள்கைகளைத் தமது அபிவிருத்தி உபாயங்களின் மையவிடயமாக ஏற்றுக் கொள்ளுதலைக் குறிக்கும்.

* மனித வரலாற்றில் ஆரம்பத்திலிருந்தே அறிவும் புத்தாக்கச் சிந்தனையும் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்து வந்துள்ளன. ஆனால், கடந்த காலங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பப் புரட்சியும் கோளமயமாக்கமும் உலகப் பொருளாதார வளர்ச்சியின் உந்துசக்திகளாக மாறியுள்ளன.

இந்நிலையில் வளர்முகநாடுகள் அறிவார்ந்த பொருளாதாரம் என்னும் விடயத்தலைப்பில் தமது மேம்பாடு பற்றிச் சிந்திக்க வேண்டும்.

* வளர்ச்சியடைந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் அறிவும் புத்தாக்கமும் வகிக்கின்ற பிரதான பங்கு பற்றித் தெளிவான ஒரு விளக்கம் உண்டு. அதன் காரணமாகவே அறிவார்ந்த- அறிவுசார் பொருளாதாரம் என்ற கருத்தாக்கம் உருவாக முடிந்தது. ஆனால் வளர்முகநாடுகளில் இவ்வாறான விளக்கம் தற்போது பரவலாக இல்லை. வளர்முக நாடுகளில் தற்போதைய அரசியல், பொருளாதார சூழ்நிலைகள் இவ்வாறான ஒரு விளக்கத்தைப் பெற்றுத் கொள்ளத் தடையாக உள்ளன.

* வளர்முக நாடுகள் அறிவார்ந்த பொருளாதாரங்களை உருவாக்கிக் கொள்ள நான்கு விடயங்களில் அக்கறை செலுத்த வேண்டும்.

தமது கல்வி முறை

புத்தாக்க ஏற்பாடுகள்

தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பு

உயர்தரமான பொருளாதார, நிறுவன அமைப்புகள்

இந்நான்கு விடயங்களும் நான்கு தூண்கள் (Four Pillers), படிப்படியாகக் கவனிக்கப்பட வேண்டியவை.

* அறிவார்ந்த பொருளாதாரம் என்பது முற்றாக பொருளாதார வளர்ச்சிக்கு அறிவில் தங்கியிருக்கும் பொருளாதாரம்; அத்தகைய பொருளாதார முறையில் அறிவு பெறப்படுகிறது; சேகரிக்கப்படுகின்றது. உருவாக்கப்படுகின்றது; நாடெங்கும் பரப்பப் படுகின்றது. பொருளாதார வளர்ச்சி நோக்கிப் பயன்படுத்தப்படுகின்றது.

* அறிவார்ந்த பொருளாதாரத்தின் முதலாவது நிபந்தனை கல்விவளர்ச்சி: ஊழியர் தொகுதியில் உள்ள சகலரும் கல்வி அறிவும் திறனும் படைத்தவர்களாகவும் தமது கல்வி அறிவையும் திறன்களையும் தொடர்ச்சியாக மேம்படுத்தும் உளப்பாங்கு உடையவர்களாகவும் இருத்தல் வேண்டும்; அத்துடன் தமது அறிவை வினைத்திறனுடன் பயன்படுத்துபவர்களாகவும் இருத்தல் வேண்டும். அறிவை உருவாக்கவும் பகிர்ந்து கொள்ளவும் பரப்பவும் அதனை முகாமை செய்யவும் நன்கு கல்வி கற்றவர்கள் தேவை. மாறிவரும் கோளமயமாக்கப்பட்ட உலகில், நன்கு கற்றவர்களாலேயே அறிவை உற்பத்தி மேம்பாட்டுக்குப் பயன்படுத்த முடியும்.

அடிப்படைக்கல்வியானது, வாழ்க்கை நீடித்த கல்விக்கான அத்திவாரத்தை வழங்குகின்றது.

இடை நிலை மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி என்பன ஆக்கத்திறன், திறனாய்வுச் சிந்தனை, பிரச்சினை தீர்த்தல், புத்தாக்கச் சிந்தனை என்பவற்றுக்கு அடிப்படையானவை. பொறியியல் மற்றும் உயர்நிலை விஞ்ஞானக் கல்வி என்பன தொழில் நுட்பவளர்ச்சியின் போக்குகளை அறிய உதவும், புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்த உதவும், ஒரு குறிப்பிட்ட பொருளாதார முறைக்கோ அல்லது கம்பெனிக்கோ தேவைப்படும் அறிவுத் தொகுதியை இனங்காண இவை தேவை.

உயர் கல்வியும் ஆராய்ச்சியும் புதிய அறிவை உருவாக்கவும் அதனை ஒரு குறிப்பிட்ட பொருளாதார முறை நோக்கிப் பயன்படுத்தவும் உதவுவன.

இன்றைய அறிவுப் புரட்சியானது தொடர்கல்வியையும் வாழ்க்கை நீடித்த கல்வியையும் அத்தியாவசியமாக்குகின்றது. பழைய அறிவு காலாவதியாக, புதிய அறிவை வளர்ந்தோரும் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் அவர்கள் அறிவார்ந்த பொருளாதாரத் தோடு இசைந்து வாழ முடியாது.

வளர்முக நாடுகள் அறிவை துரிதமாக உள்வாங்கி, வளர்ச்சியடைந்த நாடுகளை எட்டிப் பிடித்து அவற்றுடன் போட்டியில் ஈடுபட வேண்டிய அவசியமும் உண்டு.

* இரண்டாவதாக, நவீனமான, போதுமான தகவல் தொழில் நுட்படக் கட்டமைப்பானது அவசியமாகின்றது. தகவலையும் அறிவையும் வினைத்திறனுடன் வழங்குதல், பரப்புதல், செயல்முறைப்படுத்தல் (Processing) முதலிய நோக்கங்களை அடைய இக்கட்டமைப்பு அவசியமாகின்றது. கைத்தொழில் யுகத்தில் புகையிரதம், வீதிகள், போன்றன தேவைப் பட்டன போன்று இன்றைய கோளமயப்படுத்தப்பட்ட, தகவல்மையப் பொருளாதார முறைக்குத் தகவல், தொடர்பாடல் தொழில் நுட்பங்களும் - தொலைபேசி, தொலைக்காட்சி, வானொலி வலையமைப்பு - என்பன தேவைப்படுகின்றன. இவை யாவும் தகவல்களைப் பெறும் வழிமுறைகளாகும் (access) தகவல் பரிமாற்றத்துக்கான செலவுகளையும் குறைக்க வல்லன.

தகவல், தொடர்பாடல் தொழில் நுட்பக் (ICT) கொள்கையில் அடங்குவன.

1. தொலைத் தொடர்பாடல் ஒழுங்குவிதிகள்

2. சமூகம், பொருளாதார முறை முழுவதற்குமான தகவல், தொடர்பாடல் தொழில் நுட்பவளர்ச்சிக்குமான முதலீடு, பயன்பாடு, அரசாங்கம், வர்த்தகம், கற்றல் என்பவற்றினூடாக ICT கட்டமைப்பை ஏற்படுத்த இம்முதலீடு தேவை.

வளர்முக நாடுகளுக்கு வழங்கப்படும் பிரதான ஆலோசனை, மிக நவீன தொழில் நுட்பங்கள், அவற்றின் பிரயோகம் என்பவற்றை மேம்படுத்து முன்னர், ICT க்கான அடிக்கட்டமைப்பை அந்நாடுகள் ஏற்படுத்தல் வேண்டும்.

அறிவு வளர்ச்சி ஒரு வரலாற்றுப் பின்புலம்

மனித குலத்தின் வளர்ச்சியில் அறிவானது பிரதான பங்கைப் பெற்று வந்துள்ளது. நெருப்பை மனிதன் கண்டறிந்ததன் காரணமாக மக்கள் குழுவினர் பல பயன்களைப் பெற்றனர். புராதன சமூகங்கள், தாவரங்கள், விலங்குகள், கனிப் பொருட்கள் பற்றிய பெற்ற அறிவினால் பல நூற்றாண்டுகளாக அச்சமூகங்கள் வாழ்வாதாரங்களைப் பெற முடிந்தது. மெசப்பட்டேமியா, தென் சீனா, மத்திய அமெரிக்கா, மேற்கு ஆசிய நாடுகளில் கண்டறியப்பட்ட விவசாய முறைகள் முக்கியமானவை. இவ்வறிவு எழுத்துருவில் இடம் பெற்றமையால் இவ்வறிவு தலைமுறை தலைமுறையாக வழங்கப்படலாயிற்று. மத்திய கால நாகரிகங்கள் உருவாக இவை உதவின.

பண்டைய கிரேக்க அறிவின் மறுகண்டுபிடிப்பானது பின்னர் ஐரோப்பிய கைத்தொழில் புரட்சிக்குக் காரணமாயிற்று. கிரேக்கர்களின் ஆய்வு முறைகள், வானவியல், பௌதிகம், கணிதம் என்றும் துறைகளில் புதிய கண்டுபிடிப்புகளும் வழிவகுத்தன.

ஐரோப்பாவில் ரோமப் பேரரசின் வீழ்ச்சியுடன் ஆரம்பித்த இருண்ட காலத்தில் அராபியர்கள், சீனர்கள், இந்தியர்கள் உருவாக்கிய அறிவுத் தொகுதி ஐரோப்பாவுக்கு சற்று வெளிச்சத்தை வழங்கியது. இந்த அத்திவாரத்தைப் பயன்படுத்தி மறுமலர்ச்சி காலத்தில் ஐரோப்பா அறவுத்துறையில் பல ஏற்றங்களைக் கண்டது.

நீராவி இயந்திரம், புடவைத் தொழிலுக்கான இயந்திரங்களின் கண்டுபிடிப்பின்போது இங்கிலாந்தில் கைத் தொழில் புரட்சி தொடங்கிற்று. ஜெர்மனி கல்வி மற்றும் கைத்தொழில் நிறுவனங்களுக்கிடையிலான தொடர்புகளை வலுப்படுத்தியது. இதனால், ஜெர்மனி தொழில்நுட்பத் தலைவராக மாறியது. ஐக்கிய அமெரிக்கா இவ்வறிவுத்துறை சித்திகளைப் பயன்படுத்தியது. பொருள் உற்பத்தி முறையை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தது. முகாமைத்துவப் பணியை விஞ்ஞான மயப்படுத்தி முகாமைத்துவப் புரட்சியை உருவாக்கி அதனூடாக பொருள் உற்பத்தித் துறையில் புரட்சியைக் கண்டது. விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி சோவியத் யூனியன் ஒரு வல்லரசு ஆனது. ஜப்பான் மேற்கு நாட்டு விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவை உள்வாங்கி உலகின் இரண்டாவது பொருளாதார வல்லரசாயிற்று. தென்கொரியா, தைவான், மலேசியா ஆகிய நாடுகளும் இதே வழிமுறைகளைப் பின்பற்றின.

அறிவுத் துறை - அண்மைக் கால வளர்ச்சிகள்

TransistorC? Ps-k-?-i? ??k? ~s C?z-v-?-?-?? ??m-]-?? ??-??? Pm-h[-P[-P-???-k?. uP-?? ?\?-??? (process) C? x?u ??-???-? H?-?m-hx. Moors G?-??-?? ?v (law)?? ?i 24 ??u[-P-?US J? ??? uP-?? ?\?-??? B?-?? C? ?h[-P?-P? ?-S?. Po-?-?? ??Pz-v? H?-?mh Av-P-??? P?-n-??-Pz ?u???-~m-?z-v? ?? ??-???-?[-P? H?-?m-h?. \h?-??-?? ??-??? ???-P-?? ?P???-?m-h-?-??? ?v? ??m-P-?Nano ?u???-~m-?-?? Psk ?iU-P-?-?m-h?. \U-v-?-?z x??-?? H?-?mh A?-?-?z-v-P-? ?U-Q-?-??-???. C?-??-??? ??-???-?[-P? \?P, ????-u? ???-?? ?? Ai?-??h ???-?[-P?? H?-?-kz-v?.

* உலகளாவிய ரீதியில் பெருகி வரும் தொழில்நுட்ப அறிவுத் தொகுதியை உள்வாங்கி மக்கள் மாணவர் மத்தியில் பரப்பி உள்ளூர் தேவைகளுக்கேற்ப அவற்றை இசைவாக்க ஒரு வினைத்திறன்மிக்க புத்தாக்க முறைமை (innovative system) தேவைப்படுகிறது. இம்முறைமையில் அடங்குவன: ஆய்வு நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், நிபுணத்துவ ஆலோசகர்கள். வளர்முக நாடுகளைப் பொறுத்தவரையில் புத்தாக்கம் சார்ந்த அறிவும் தொழில்நுட்பமும் வெளிநாட்டு மூலாதாரங்களிலிருந்தே கிடைக்கப் பெறுவன. வெளிநாட்டு நேரடி முதலீடு, சாதனங்களின் இறக்குமதி, உரிமை ஒப்பந்தங்கள் மூலமாக இவ்வறிவும் தொழில்நுட்பமும் வந்து சேர்கின்றன. ஆயினும் இவ்விறக்குமதிகள் வளர்முக நாடுகளுக்குத் தனித்துவமான சுதேச அறிவுத் தொகுதியைப் பாதிப்பதாக அமையக் கூடாது. இந்நாட்டுகளைப் பொறுத்தவரையில் அடிப்படைத் தொழில்நுட்ப அறிவு சமூகம் முழுவதும் பரப்பப்படுவதில் கூடிய அக்கறை செலுத்தப்படல் வேண்டும்.

53 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வொன்றின் படி ஆராய்ச்சிக்கான செலவு ஒரு சதவீதத்தால் அதிகரித்த போது மொத்த தேசிய வருமானம் 0.78% அதிகரித்தது (2001)

* நான்காவதாக நாட்டின் நிறுவன அமைப்பு;

நிறுவன அமைப்பானது (Regime) உருவாக்கும் பொருளாதார ஊக்குவிப்புகள் வள ஒதுக்கீடு, வளங்களைத் திரட்டுதல் என்பவற்றில் வினைத்திறனுடையதாக ஆக்குதல் வேண்டும். அத்துடன், தொழில் முயற்சியை ஊக்குவித்து அறிவின் ஆக்கம், பரம்பல் பயன்பாடு என்பவற்றுக்கு இடந்தருதல் வேண்டும். இவ்வெண்ணக் கருவானது (institutional regime) ஒட்டு மொத்த பொருளாதார முறை வர்த்தக ஒழுங்கு விதிகள், நிதியும் வங்கிமுறையும், தொழிற்சந்தை, ஆளுகை ( governance) எனப் பல விடயங்களை உள்ளடக்குகின்றன. ஆளுகையானது சட்டத்தின் ஆட்சியையும் அதன் பிரயோகத்தையும் கருதுகின்றது. அத்துடன், அரசாங்க அதிகார வர்க்கச் செயற்றிறன் ஊழல் மட்டங்கள் என்பனவும் இதில் உள்ளடங்குகின்றன. மட்டரகமான ஆளுகை முறைகள் மோசமான வர்த்தக சூழலை ஏற்படுத்திப் பொருளாதார சமூக அபிவிருத்திக்கும் அறிவார்ந்த முறையிலான அபிவிருத்திக்கும் தடையாக அமைகின்றன.

மேற்கூறப்பட்ட நான்கு தூண்களும் உறுதியாக அமையுமிடத்து அறிவால் உந்தப்படும் பொருளாதார வளர்ச்சி ஏற்பட முடியும். இந்நான்கு தூண்கள் மீதான முதலீடு சமச்சீரானதாக இருக்கும் போது அவற்றுக்கிடையிலான இடைத்தொடர்புகள் சிறந்த பயன்களை விளைவிக்கின்றன.

Email this page Your Opinion Print this page
கவலை அளிக்கும் பெண் கருக்கொலை
அறிவுசார் பொருளாதார முறையின் சில பரிமாணங்கள்
பயங்கரவாதம் என்றால் என்ன?
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com