கடைவீதியில் முதியதோற்றமுள்ள ஒருவர் என்னிடம் வந்து "என்னைத் தெரிகிறதா?" என்று கேட்டார்.
அவரை உடனே அடையாளம் காணமுடியாவிட்டாலும், `தெரியவில்லையே' என்று சொல்ல மனம் ஒப்புக் கொள்ளாததால் `உங்கள் பெயரைச் சொல்லுங்கள்' என்றேன்.
"ஸார்! நான்தான்.... உங்களின் கீழ் பியோனாக வேலை செய்தவன். நினைவு இருக்கிறதா?" என்று அவர் கூறியதும் எனக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
அவர் இளம் வயதிலேயே முதுமையடைந்துவிட்டதைப் பார்த்து, `ஏன் இந்தக் கோலம். நோயால் பீடிக்கப்பட்டிருந்தீரா? அல்லது குடி உம்மை குடித்துவிட்டதா?' என்று நான் கேள்விகளை அடுக்கினேன்.
"உண்மைதான் ஸார்! தேகத்தைக் கவனிக்காமல் தறுதலையாக நடந்துவிட்டேன். அதன் விளைவுதான் எனது இந்த முதுமைக் கோலம்" என்று மிகக் கவலையுடன் தெரிவித்தார்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் எதற்கு?