Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
சிகை அலங்கரிப்பு தொழிலாளர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்
[01 - April - 2008] [Font Size - A - A - A]
சிகை அலங்கரிப்புத் தொழிலை மேற்கொள்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக பிரிட்டனில் புற்று நோய் தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டிருந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

சிகை அலங்கார நிபுணர், அழகுக் கலை நிபுணர்கள் மற்றும் முடி திருத்துவோரை பாதிக்கும் நோய் அபாயங்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் சிகை அலங்கார நிபுணர்கள் மற்றும் முடி திருத்துவோராகப் பணியாற்றும் ஆண்களுக்கு, பித்தப்பை புற்றுநோய் ஏற்படலாம் எனத் தெரியவந்துள்ளது.

முடிகளுக்கு பூசும் சாயத்தால், குறிப்பாக கறுப்பு நிற சாயங்களால் இது போன்ற நோய் பாதிப்பு ஏற்படலாம். இருப்பினும், இதுபோன்ற சாயங்களால் கட்டாயமாகப் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என உறுதியாகக் கூற முடியாது.

அதற்கான ஆதாரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமுடிக்கு பூசும் சாயங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம் என முன்பு சில சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.

Email this page Your Opinion Print this page
பாகிஸ்தான் பிரதமர் கிலானி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
பாகிஸ்தான் அரசு காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாண விரும்புகிறது
ரஷ்ய விண்வெளி நிறுவனத்துக்கு எதிராக ஆடுமேய்ப்பவர் வழக்கு
முக்கிய தலைவர்களின் பிரசன்னமின்றி அரேபிய லீக்கின் உச்சி மாநாடு சிரியாவில் ஆரம்பம்
சிகை அலங்கரிப்பு தொழிலாளர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com