பாதையோரத்தில் வயர் துண்டுகளுடன் காணப்பட்ட பொதியால் பெரும்பரபரப்பு ஏற்பட்ட சம்பவம் கெக்கிராவை பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
சந்தேகத்துக்கிடமான இப்பொதி குறித்து, கெக்கிராவை பிரதேச சபை தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலை அடுத்தே இந்தப் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பெண்களுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பிரதேசத்தின் பிரதான பாதைப் போக்குவரத்து தற்காலிகமாக தடைசெய்யப்பட்டதுடன் பொது மக்கள் அப்பகுதிக்கு செல்வதும் தடுக்கப்பட்டது.
அனுராதபுர இராணுவ முகாம் குண்டு செயலிழக்கும் பிரிவிற்கும் இலுத்தேகம இராணுவ முகாமிற்கும் இப்பொதி குறித்து அறிவித்ததைத் தொடர்ந்து நாடாவொன்றினால் கட்டப்பட்டிருந்த பொதியைப் பரிசோதித்த இராணுவத்தினர், அது மணல் நிறைக்கப்பட்ட போலிக் குண்டென தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்ந்தது.