மட்டக்களப்பில் இடம்பெற்ற மக்கள் சமுதாய சேவைகள் இருநாட்கள் இடம்பெற்றன.
இந்த இடம்பெயர்சேவை கடந்த சனி, ஞாயிறு இருதினங்களிலும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடம்பெற்றபோது 15,000 பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டதாகவும் 6,545 பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டதாகவும் 4,407 பிரச்சினைகள் மேல் நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கருஜயசூரிய, அமைச்சர் அமீரலி, 50 க்கும் மேற்பட்ட அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்கள கூட்டுத்தாபன தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
அதிகமான பிரச்சினைகள் பிறப்பு, இறப்பு, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியன தொடர்பாக இருந்ததாக மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.