நாத்தாண்டியா நகரில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.
நகரில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுமிடத்தில் இவர் நின்றபோதே, அங்கு வானொன்றில் வந்த மூவர் இவரை வெட்டிக் கொன்றுவிட்டு அதே வானில் தப்பிச் சென்றுள்ளனர்.
பலத்த வெட்டுக் காயங்களுக்கிலக்கான நிஷாந்த தில்ருக்ஷ் (27 வயது) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே அந்த இடத்தில் உயிரிழந்தவராவார்.
கொலைக் குற்றவாளியான இவரது படுகொலை தொடர்பாக மாரவில பொலிஸார் விசா ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.