ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நாடு பூராகவும் உள்ள தேர்தல் தொகுதி அமைப்பாளர்களில் கூடுதலான அங்கத்தவர்களை சுதந்திர கட்சிக்கு இணைத்துக் கொண்ட 10 அமைப்பாளர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் வைத்து கௌரவித்தார்.
இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த மூவர் கௌரவிக்கப்பட்டனர்.
இரத்தினபுரி தேர்தல் தொகுதி அமைப்பாளரும் மின்சக்தி எரிசக்தி அமைச்சருமான டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன இறக்குவானை தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும் சப்ரகமுவ மாகாண காணி விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சருமான டி. ரஞ்சித் த சொய்ஸா கலவானை தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும், சப்ரகமுவ மாகாண சபையின் உறுப்பினருமான ஜானக்க வக்கும்புர ஆகியோரே கௌரவிக்கப்பட்டுள்ளனர்.