வேண்டுமெனத் தெரிவித்திருக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம் இலவச பாடநூல்களை இதுவரையும் முழுமையாக விநியோகிக்காத கல்வியமைச்சு மனிதத்தன்மையில்லாமலா பணியாற்றுகிறதெனவும் கேள்வியெழுப்பியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்ததாவது;
" எதிர்வரும் 9 ஆம் திகதி அரசாங்கப் பாடசாலைகள் முதலாம் தவணைவிடுமுறைக்காக மூடப்படவுள்ளன. எனினும், இதுவரை இலவச பாடநூல்கள் மாணவர்களுக்கு உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை. தற்போது தவணைப் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில் பாடநூல்கள் கிடைக்காமையால் மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தே பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
5,7,8,9,10,11 ஆகிய தரங்களுக்கு இலவச பாடநூல்கள் உரிய முறையில் விநியோகிக்கப்படவில்லை. குறிப்பாக 11 ஆம் தர மாணவர்களுக்கு தமிழ் இலக்கிய நூல் கிடைக்கவேயில்லை. கடந்த வருடமும் இவ்வாறான நிலையே காணப்பட்டது.
சாதாரணதரப் பரீட்சையில் 80 சதவீத வினாக்கள் தமிழ் இலக்கிய நூலிலிருந்தே தொகுக்கப்படுகிறது. இந்நூல் கிடைக்காத பட்சத்தில் மாணவர்கள் எவ்வாறு சாதாரணதர இறுதிப் பரீட்சைக்கு தோற்றுவது? எந்தடிப்படையில் சித்தியடைவது?
எதிர்வரும் சாதாரணப் தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடைய தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பையும் கல்வியமைச்சு ஏற்க வேண்டும்.
3 மாதம் கழிந்தும் இலவச பாடநூல்களை கல்வியமைச்சு சரியாக விநியோகிக்காமையால் அமைச்சு மனிதத் தன்மையுடனா? பணியாற்றுகிறது என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
கல்வியமைச்சும் கல்வி வெளியீட்டுத் திணைக்களமும் தாம் எத்தனை முறை இலவசப் பாடநூல் விநியோகம் தொடர்பில் பொய் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனவென்பதை ஒருமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இல்லையேல் இலவசக் கல்வி கற்க மாணவர்களுக்குள்ள உரிமையை தடுப்பதாக அமையும்" என்றார்.