Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
[01 - April - 2008] [Font Size - A - A - A]
* மு.கா.தலைவர் ரவூப்ஹக்கீம்

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமென்று ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நான்கு உள்ளூராட்சிசபைகளுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற 7 முஸ்லிம்காங்கிரஸ் உறுப்பினர்கள் சனிக்கிழமை மாலை ஏறாவூர் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலக கேட்போர் கூடத்தில் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் எம்.பி.ஹசனலி தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் முன்னிலையில் சக்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வு தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;

சரியான முடிவுகள் சரியான சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட வேண்டும். ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தலில் எடுக்கும் முடிவு, பிழையான சந்தர்ப்பத்தில் எடுக்கப்படும் சரியான முடிவாகவும், சரியான சந்தர்ப்பத்தில் எடுக்கப்படும் பிழையான முடிவாகவும் இருந்து விடக்கூடாது என்பதே கட்சியின் விருப்பமாகும்.

வடகிழக்கை பிரித்துவிட்டு அதனூடாக முஸ்லிம்கள் ஆறுதல் அடையலாம் என்று நினைத்திருந்தவர்கள் தங்களுடைய அரசியல் அந்தஸ்துக்கு இதனால் கேடுவிளைந்து விடுமோ என்று அச்சப்படுகின்ற இந்தக் காலத்தில் முஸ்லிம்காங்கிரஸின் அந்தஸ்த்து எவ்வளவு பெறுமதியானது என்பதை கடந்த ஓரிரு வாரங்களில் சிறப்பாக உணர்த்திருக்கிறார்கள்.

நாம் எடுக்கப்போகும் தீர்மானம், சரியான சந்தர்ப்பத்தில் எடுத்த சரியான தீர்மானமாக அமைந்தது என்பதை கிழக்குமாகாணசபைத் தேர்தலுக்குப் பிறகு எல்லோரும் உணர்ந்து கொள்ளும் விடயமாக அமைய வேண்டும்.

எம்மில் பெருவாரியானவர்கள் எமது கட்சிச் சின்னத்தின் மகிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறோம். இன்று அரசில் இருக்கும் அமைச்சர்கள் இதைக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸை மலினப்படுத்துவதற்குப் பாவிக்கிறார்கள்.

"நாம் அமைச்சுப் பதவிகளை விட்டுத் தருவதற்கு தயாராக இருந்தோம். ரவூப் ஹக்கீம் மரச்சின்னத்தை விடுவதற்குத் தயாரில்லை. அவரது இந்தப் பிடிவாதம் தான் முஸ்லிம்களுக்கு முதலமைச்சரை இல்லாமற் செய்யப் போகிறது என்று இவர்கள் கதையளக்கின்றனர்.

கிழக்கில் முதலமைச்சர் ஒருவர் முஸ்லிமாக வந்து விட்டால் அது மு.கா.தலைவரின் பதவிக்குச் சவாலாக வந்துவிடும் என்று தலைவர் ரவூப்ஹக்கீம் பயப்படுகிறார் என்றும் இதனால் தான் முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்கு எந்த முயற்சியும் செய்வதில்லை என்றும் தீவிரமாகப் பிரசாரம் செய்ய முயல்கின்றனர்.

முஸ்லிம் சமூகத்தின் அரசியற் சக்தியை இந்த மாகாண சபைத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும் என்பதில் நாம் மிக உறுதியுடன் இருக்கிறோம். அந்த உறுதியை கட்சியின் ஏகோபித்த முடிவாகக் கொண்டு வருவதற்கு நாம் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், கட்சி எடுக்கும் முடிவை முன் கூட்டியே அறிந்து கொண்டு, தங்களுடைய உபாயங்களை மாற்றிக் கொள்வதற்கு, எம்மை வீழ்த்த நினைக்கும் சக்திகள் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

எனவே தான் எமது முடிவை தாமதிக்க முடிவுசெய்தோம். இன்னும் தீர்க்கமாக என்னென்ன விதத்தில் எதிர்த்தரப்புகளின் உபாயங்கள் அமைகின்றன என்பதை கூர்மையாக அவதானித்துக் கொண்டிருக்கிறோம்.

எமது எதிரிகள் என்பது அரசாங்கம் மட்டுமல்ல அரசாங்கத்துக்குள் உள்ள முஸ்லிம்கள் மட்டுமன்றி, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உள்ள முஸ்லிம்கள் கூட எமது எதிரிகளே. இவர்களும் முஸ்லிம் காங்கிரஸ் வளர்வதை விரும்பவில்லை.

முஸ்லிம் முதலமைச்சர் பதவியைக்கைபற்றுவது அசாத்தியமானது என்று எண்ணிக் கொண்டு, அதை சாத்தியமாக்குவதற்கு மிக இலகுவான வழியைத் தேடுவதில் என்னபிழை என்றும் எமது எதிரிகளால் பிரசாரம் செய்யப்படுகிறது.

இலேசாகப் போய்த் தட்டிப் பறிக்கப்படும் ஒரு பதவியாக இந்த முதலமைச்சர் பதவியை நாம் பாப்பதன் மூலம் அது நிரந்தரமாக இந்த சமூகத்துக்கு இல்லாமற் போகின்றது. அதன் மூலம் எமக்கு என்ற ஒரு சுயாட்சியும் இல்லாமற் போகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவு எடுத்து விட்டால் அந்த முடிவுக்குப் பின்னால் முஸ்லிம் சமூகத்தை கொண்டு வரச் செய்யும் கடமையை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை சாதித்துவிடும் என்ற பீதி இருக்கிறது.

இந்தக் தேர்தல் நடப்பதும் பிற்போடப்படுவதும் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கப் போகும் தீர்மானத்தில் இருக்கிறது என்பதை கூறிவைக்க விரும்புகிறேன். அரச மேல் மட்டத்தில் நிச்சயமாக மு.கா.முடிவைப்பொறுத்து இதற்கு ஏற்றவிதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம்.

தங்களுக்குச் சாதகமான முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துவிட்டால் தேர்தலை நடத்துவது, இல்லையென்றால் தேர்தலைப் பிற்போடுவது என்பதில் அரசு தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இத்தேர்தல் நடத்தப் படுவதையே விரும்புகிறது. ஏனெனில் இக்கட்சி தேர்தல்களுக்குப் பயந்து ஓடி ஒதுங்கிக்கொள்ளும் கட்சியல்ல. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பும், ஐ.தே.க.வும் ஒதுங்கிக் கொண்டது என்பதற்காக நாங்கள் ஒதுங்காமல் தைரியமாக முகம் கொடுத்து இன்று ஒரு உன்னதமான நிலையில் இருக்கிறோம்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக நாம் எடுக்கும் தீர்மானம் இந்த சமூகத்தின் ஒற்றுமையை உலகறியச்செய்யும் தீர்மானமாகவும், தீர்க்கதரிசனத்துடனும், தூரநோக்குடனும் செய்யப்பட்ட தீர்மானமாகவும், கட்சிப் போராளிகளின் பெருவிருப்பத்துக்குரிய விடயங்கள் நிறைவேறுகின்ற தீர்மானமாகவும் ஒரே நேரத்தில் உடனடியாக அமைய வேண்டும் என எதிர்பார்ப்பது மிகவும் கடினமான விடயமாகும்.

கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் கட்சியை மிகப்பெரிய தியாகங்களோடு களமிறக்குகின்ற தேர்தலாக மாறியிருக்கிறது. இத்தேர்தலோடு எம்மை வீழ்த்தி குழியில் போட்டு மூடிவிடலாம் என்று நினைக்கும் சக்திகளுக்கு ஒரு சரியான பாடத்தை நாம் புகட்டியாக வேண்டும்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளை ஒன்றிணைக்கும்வரை ரஜனி படங்களில் நடிக்கமாட்டார்
அவதானிப்பு பணியை நிறுத்தியது சர்வதேச நிபுணர்கள் குழு
சந்திரிகா இழைத்த மூன்றாவது தவறை இப்போது கூறமாட்டார்
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட
வட, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
பௌத்த விகாரையில் போலியான பெயரில் தங்கியிருந்த பூசகர் பொலிஸாரால் கைது
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
கொலைக் கலாசாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் பின்னிற்காது
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடையத் தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கல்வி அமைச்சே ஏற்க
பண்டாரவளை டயரமாவில் மினி சூறாவளி 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
பதுளையில் இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடமாற்றம், வேலை வழங்க மறுப்பு
ஜனாதிபதிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் கைதான 4 தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுதலை
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
மூன்று அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
கல்முனைக்குடி கடற்கரையில் மீன்வாடிகள் சில தீக்கிரை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புங்குடுதீவுக்கு மின்சார விநியோகம்
நாத்தாண்டியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
படையில் இணைவதில் தீவிர ஆர்வம் அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பம்
15000 பிரச்சினைகளில் 6545க்கு தீர்வு
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
மொனராகல வாழ் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்தவர் முத்துலிங்கம்
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து தேர்தலில் குதிக்க வேண்டும்
குண்டுப் பீதியால் பெரும் பரபரப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com