முல்லைத்தீவு பகுதியில் நேற்று திங்கட் கிழமை காலையும் விமானப் படை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
முல்லைத்தீவுக்கு மேற்கே பத்து கிலோமீற்றர் தூரத்திலுள்ள விடுதலைப்புலிகளின் நிலைகள் மீதே இரு தடவைகள் கடும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
விடுதலைப்புலிகளின் விமான ஓடு தளங்கள் மீதே இரண்டுக்கும் மேற்பட்ட விமானங்கள் காலை 9.45 மணியளவிலும் 10.30 மணியளவிலும் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் விமான ஓடுதளம் மீதும் அவர்களது முகாம்கள் மீதுமே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இதனால் புலிகளுக்கு பலத்த சேதங்களேற்பட்டுள்ளதாக விமானிகள் தெரிவிப்பதாகவும் விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.