Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
[01 - April - 2008] [Font Size - A - A - A]
* இந்தியாவில் அமைச்சர் டியூ குணசேகர

தமிழ்க் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணியொன்று விரைவில் தோற்றம் பெற உள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளிவருமெனவும் அரசியலமைப்பு தேசிய ஒருங்கிணைப்பு விவகார அமைச்சர் டியூ குணசேகர இந்தியாவில் தெரிவித்துள்ளார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான டியூ குணசேகர இந்திய (மார்க்ஸிஸ்ட்) கம்யூனிஸ்ட் கட்சியின் 19 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டார்.

தமிழ்க்கட்சிகளின் புதிய கூட்டணியானது இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று `இந்து' பத்திரிகைக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் புதிய கூட்டணியானது இலங்கையின் இனநெருக்கடிக்கு சமாதானத்தீர்வு காண்பதற்கான பணிகளில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

`ஈழம் கோரிக்கையை கைவிட விடுதலைப் புலிகள் தயாராக இல்லை. சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பல தடவை முயற்சிகளை மேற்கொண்ட போதும் மாற்றுத் தீர்வை ஏற்றுக் கொள்ள புலிகள் ஆயத்தமாக இல்லை.

விடுலைப் புலிகளின் தமிழ் மக்கள் மீதான பிடி இப்போது பலவீனமடைந்து வருகிறது. ஆதலால் தமிழ் பேசும் மக்களுக்கான அனுகூலங்களை உறுதிப்படுத்துவதற்காக சட்ட ரீதியாக எவற்றை வழங்க முடியுமோ அதனை வழங்குவதற்கு இது பொருத்தமான தருணமாகும். அரச சேவையில் இருமொழிக் கொள்கையை அமுல்படுத்துவது இந்த இலக்கை வெற்றிக் கொள்வதற்குரிய சாதகமான நடவடிக்கையாகும்.

சிங்கள மற்றும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவது இறுதிச் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். இலங்கையில் அரச சேவையில் இருமொழிக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

அரச அலுவலகங்களில் பயன்படுத்தப்படுவதற்காக பரஸ்பரம் இருமொழிகளையும் கற்குமாறு ஊக்குவிப்பளிக்கப்படுகிறது. தமிழுக்கு சம இடம் அளிக்கப்படுவதன் மூலம் ஆளுக்கு ஆள் காணப்படும் இனரீதியான பிளவை முடிவுக்கு கொண்டுவர முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்குரிய போதிய வளங்கள் பற்றாக்குறையாக இருப்பது இரு பிரிவினருக்கும் இடையில் ஒருவரையொருவர் சந்தேகத்துடன் பார்ப்பதற்கு வழிவகுக்கிறது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் தமிழ் உத்தியோக பூர்வமொழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அது நடைமுறைப்படுத்தப்பட பல வருடங்கள் எடுத்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் பதவிக்கு வந்த அரசாங்கங்களால் இதனை அமுல்படுத்த முடியவில்லை.

இரு வாரங்களுக்கு முன்னர் 5900 சிங்களவர்கள் தமிழில் முதலாவது பரீட்சைக்கு தோற்றினர். வட, கிழக்கில் 1065 தமிழர்கள் சிங்களத்தில் பரீட்சை எழுதினர். நான் அமைச்சராக பதவியேற்றவுடன் இருமொழிக் கொள்கை அமுலாக்கம் குறித்து அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பித்திருந்தேன். தமிழுக்கும் சிங்களத்துக்கும் சம அந்தஸ்து என்பதே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும். அதாவது இரு மொழிகள், ஒரு நாடு என்பதே அந்த நிலைப்பாடாகும்.

100 சதவீதம் தமிழ் மக்கள் வாழும் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் 100 சதவீதம் சிங்கள பொலிஸாரே கடமையாற்றினர். இப்போது தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் குறைந்தது ஒரு தமிழ் பேசும் பொலிஸ்காரரையாவது நாம் நியமித்துள்ளோம். கடந்த இரு வருடங்களில் 3 ஆயிரம் பொலிஸாருக்கு தமிழில் பணியாற்றுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமிழ்மொழி கற்பிக்கப்பட வேண்டுமென புலிகள் விரும்பினர். மொழியை கற்பிப்பதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்க வேண்டுமென நான் பணித்திருக்கிறேன்.

நாட்டில் பிரிவினை இருக்கக்கூடாது. ஆனால், சம உரிமைகள் அளிக்கப்படவேண்டும். இருநாடுகளுக்குமிடையிலான பிணைப்புகளை வலுப்படுத்த இந்தியா ஒத்துழைத்து வருகின்றது. ஓரிரு கட்சிகளைத் தவிர எமது கட்சிகள் யாவுமே புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டுமென்ற நிலைப்பாட்டையே கொண்டுள்ளன என்றும் டி.யூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளை ஒன்றிணைக்கும்வரை ரஜனி படங்களில் நடிக்கமாட்டார்
அவதானிப்பு பணியை நிறுத்தியது சர்வதேச நிபுணர்கள் குழு
சந்திரிகா இழைத்த மூன்றாவது தவறை இப்போது கூறமாட்டார்
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட
வட, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
பௌத்த விகாரையில் போலியான பெயரில் தங்கியிருந்த பூசகர் பொலிஸாரால் கைது
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
கொலைக் கலாசாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் பின்னிற்காது
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடையத் தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கல்வி அமைச்சே ஏற்க
பண்டாரவளை டயரமாவில் மினி சூறாவளி 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
பதுளையில் இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடமாற்றம், வேலை வழங்க மறுப்பு
ஜனாதிபதிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் கைதான 4 தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுதலை
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
மூன்று அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
கல்முனைக்குடி கடற்கரையில் மீன்வாடிகள் சில தீக்கிரை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புங்குடுதீவுக்கு மின்சார விநியோகம்
நாத்தாண்டியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
படையில் இணைவதில் தீவிர ஆர்வம் அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பம்
15000 பிரச்சினைகளில் 6545க்கு தீர்வு
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
மொனராகல வாழ் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்தவர் முத்துலிங்கம்
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து தேர்தலில் குதிக்க வேண்டும்
குண்டுப் பீதியால் பெரும் பரபரப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com