Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
[01 - April - 2008] [Font Size - A - A - A]
*போலிப் பிரசாரம் இடம்பெறுவதாக சாடுகிறார்

கெஹலியகிழக்கு மாகாணத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாதென தெரிவித்திருக்கும் பாதுகாப்பு பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அவ்வாறு வெளியான செய்திகள் உண்மைக்கு மாறானவையெனவும் தெரிவித்தார்.

ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுத் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;

"கிழக்கு மாகாண தேர்தலை அரசாங்கம் ஒத்தி வைக்கப் போவதாக போலியான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இது தவறானதும் உண்மைக்கு புறம்பானதுமாகும். தேர்தலை ஒத்தி வைக்கும் எத்தகைய நோக்கத்தினையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லையென்பதை உறுதிப்படத் தெரிவிக்கிறேன்.

கிழக்கு தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. கிழக்கு மாகாணத்தை விடுவித்ததன் பின்னர் அப்பகுதி மக்களிடம் அவர்களுக்கான தலைமைத்துவத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் தலைமைத்துவத்தை மேலும் பாதுகாப்பதற்கே அங்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

இதேவேளை, புலிகளின் முகவர் அமைப்புகளை தேடிக் கண்டு பிடித்து விசாரணை செய்யும் நடவடிக்கையை பிரித்தானிய அரசாங்கம் முடுக்கி விட்டிருப்பதாக அந்நாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பல சர்வதேச நாடுகள் புலிகளுக்கு தடை விதித்துள்ள போதிலும் புலிகள் அந்நாடுகளில் சட்ட விரோதமான முறையில் இயங்கியே வருகின்றனர்.

பிரித்தானியாவும் புலிகளை தடை செய்துள்ள ஒரு நாடாகும். அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு பயங்கரவாத அமைப்பு அங்கு சட்டவிரோதமான முறையில் செயற்படுவதை தடுக்க அந்நாடு மேற்கொண்டுள்ள முயற்சிகளை இலங்கை அரசாங்கம் வரவேற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளை ஒன்றிணைக்கும்வரை ரஜனி படங்களில் நடிக்கமாட்டார்
அவதானிப்பு பணியை நிறுத்தியது சர்வதேச நிபுணர்கள் குழு
சந்திரிகா இழைத்த மூன்றாவது தவறை இப்போது கூறமாட்டார்
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட
வட, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
பௌத்த விகாரையில் போலியான பெயரில் தங்கியிருந்த பூசகர் பொலிஸாரால் கைது
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
கொலைக் கலாசாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் பின்னிற்காது
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடையத் தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கல்வி அமைச்சே ஏற்க
பண்டாரவளை டயரமாவில் மினி சூறாவளி 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
பதுளையில் இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடமாற்றம், வேலை வழங்க மறுப்பு
ஜனாதிபதிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் கைதான 4 தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுதலை
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
மூன்று அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
கல்முனைக்குடி கடற்கரையில் மீன்வாடிகள் சில தீக்கிரை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புங்குடுதீவுக்கு மின்சார விநியோகம்
நாத்தாண்டியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
படையில் இணைவதில் தீவிர ஆர்வம் அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பம்
15000 பிரச்சினைகளில் 6545க்கு தீர்வு
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
மொனராகல வாழ் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்தவர் முத்துலிங்கம்
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து தேர்தலில் குதிக்க வேண்டும்
குண்டுப் பீதியால் பெரும் பரபரப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com