Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
[01 - April - 2008] [Font Size - A - A - A]
ஒலிம்பிக் தீபத்தை சீனா நேற்று திங்கட்கிழமை கோலாகலமாக வரவேற்றது.

தியானமென் சதுக்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்ட சீன ஜனாதிபதி ஹு ஜிந்தோ முதலில் தீபத்தை ஏந்தி விழாவை ஆரம்பித்து வைத்தார்.

சீன அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் நிகழலாம் என்ற அச்சத்தின் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்தவாரம் ஒலிம்பிக் தீபத்தை சம்பிரதாய பூர்வமாக ஏற்றும் நிகழ்வு கிரேக்கத் தலைநகர் ஏதேன்ஸில் நடைபெற்ற போது திபெத்தியர்களின் மீதான சீனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டக் காரர்கள் பொலிஸாருடன் மோதல்களில் ஈடுபட்டதுடன் நிகழ்வுக்கு இடையூறு விளைவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று கஸகஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஒலிம்பிக் தீபம் சீனாவில் எதிர்வரும் ஆகஸ்ட்டில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர். 20 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இவ் ஒலிம்பிக் தீபம் பெய்ஜிங்கை வந்தடையவுள்ளது.

சீனாவுக்குச் சொந்தமான விமானமொன்றில் கிரேக்கத்திலிருந்து பெய்ஜிங் விமான நிலையத்தை வந்தடைந்த இத் தீபத்தை நூற்றுக்கணக்கான பாடசாலை சிறுவர்கள் கொடிகளை அசைத்தவாறு வரவேற்றனர். அத்துடன், `ஒரே உலகம் ஒரே கனவு' என்ற ஒலிம்பிக் வாசகத்தைப் பாடி மாணவர்கள் கரகோஷமெழுப்பினர்.

பின்னர் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தியானமென் சதுக்கத்திற்கு இத் தீபம் எடுத்துச் செல்லப்பட்டது. செங்கம்பளம் விரிக்கப்பட்ட மேடையின் மீது நின்று தீபத்தை ஏற்றிய ஜனாதிபதி ஹு ஜிந்தோ பின்னர் அதனை சீனாவின் ஒலிம்பிக் சாம்பியன் லியு ஸியாங்கிடம் கையளித்தார். அத்துடன், பெய்ஜிங்கின் 2008 ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயணம் ஆரம்பித்துவிட்டதையும் அவர் பிரகடனப்படுத்தினார்.

1896 இல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் முதன் முதலில் நடைபெற்ற ஏதேன்ஸின் பனாதிணைகோ அரங்கத்தில் வைத்து ஒலிம்பிக் தீபத்தை சாம்பிரதாய பூர்வமாக சீன ஒலிம்பிக் போட்டிகளுக்கான தலைமையதிகாரி லியு கியுவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Email this page Your Opinion Print this page
சீனாவில் ஒலிம்பிக் தீபமேற்றும் விழா
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நோக்கம் இல்லை
ஓரிரு தினங்களில் தமிழ் கட்சிகளின் புதிய ஜனநாயக கூட்டணி உதயம்
முல்லைத்தீவுப் பகுதியில் கடும் விமானத்தாக்குதல்
தற்கொலை குண்டுதாரிகள் மனம் மாறினால் 1 கோடி ரூபா சன்மானமென்ற சுவரொட்டி அறிவிப்பு அரசின் கைவரிசை
இலங்கை தமிழர் பிரச்சினையில் தமிழக கட்சிகளை ஒன்றிணைக்கும்வரை ரஜனி படங்களில் நடிக்கமாட்டார்
அவதானிப்பு பணியை நிறுத்தியது சர்வதேச நிபுணர்கள் குழு
சந்திரிகா இழைத்த மூன்றாவது தவறை இப்போது கூறமாட்டார்
மு.கா.வுடன் இணக்கப்பாடு ஏற்படாவிடில் வியாழனன்று தனித்து வேட்புமனு தாக்கல்
பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகமாக தம்மிக்க கித்துலேகொட
வட, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல்
முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியை வெளிக்காட்டும் களமாக கிழக்கு மாகாணசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்
பௌத்த விகாரையில் போலியான பெயரில் தங்கியிருந்த பூசகர் பொலிஸாரால் கைது
கடும்மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க ஏற்பாடு
கொலைக் கலாசாரத்தை தடுத்து நிறுத்துவதற்கு மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் பின்னிற்காது
எதிர்வரும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் உரிய முறையில் மாணவர்கள் சித்தியடையத் தவறுவார்களாயின் அதற்கான முழுப் பொறுப்பினையும் கல்வி அமைச்சே ஏற்க
பண்டாரவளை டயரமாவில் மினி சூறாவளி 13 தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு
பதுளையில் இரு வெவ்வேறு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடமாற்றம், வேலை வழங்க மறுப்பு
ஜனாதிபதிக்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் கைதான 4 தொழிற்சங்க பிரதிநிதிகள் விடுதலை
கோவர்த்தனியை அக்ஷன்பாம் நிறுவனத்தினர் பாதுகாப்பாக அழைத்து வருவார்களென்ற நம்பிக்கையில் இருந்தோம்
மூன்று அமைப்பாளர்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு
கல்முனைக்குடி கடற்கரையில் மீன்வாடிகள் சில தீக்கிரை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டும் துப்பாக்கி சூட்டிலும் ஆறுபேர் உயிரிழப்பு
`அனைவரும் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்கவே பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது'
மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவுக்கு போதிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை
நான் பார்வையிடும்போது வெறுந்தரையில் வெற்று ரவைகள் காணப்படவில்லை
18 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் புங்குடுதீவுக்கு மின்சார விநியோகம்
நாத்தாண்டியாவில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
படையில் இணைவதில் தீவிர ஆர்வம் அடுத்தகட்ட ஆட்சேர்ப்பு இன்று ஆரம்பம்
15000 பிரச்சினைகளில் 6545க்கு தீர்வு
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது
சமூக மேம்பாட்டிற்காக மலையக அமைப்புகள் பணியாற்ற வேண்டும்
மொனராகல வாழ் தமிழ் மக்களுக்காக துணிவுடன் குரல் கொடுத்தவர் முத்துலிங்கம்
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் பொதுச் சின்னத்தின் கீழ் ஒன்றிணைந்து தேர்தலில் குதிக்க வேண்டும்
குண்டுப் பீதியால் பெரும் பரபரப்பு
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com