அவுஸ்திரேலிய நீச்சல் போட்டித் தொடர் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான சோதனை நீச்சல் போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய நீச்சல் வீரர் ஈமான் சல்லிவன் தனது உலக சாதனையையே மீண்டும் முறியடித்துள்ளார்.
சிட்னி ஒலிம்பிக் நிலையத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 50 மீற்றர் `ப்ரிஸ்ரைல்' பிரிவில் 21.28 வினாடிகளில் கடந்து தனது முந்தைய 21.41 வினாடிகள் என்ற சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் கடந்த வாரம் ஹொலன்டில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன் நீச்சல் போட்டிகளில் பிரான்ஸ் வீரர் அலைன் பெர்னார்ட் இதே நீச்சல் பிரிவில் வைத்திருந்த சாதனையையும் முறியடித்துள்ளார் சல்லிவன்.