Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 01, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Sports news
ஐ.பி.எல்; போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் விளையாட முடியாத நிலை
[01 - April - 2008] [Font Size - A - A - A]
எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பொண்டிங், சைமண்ட்ஸ், பிரெட் லீ ஆகியோர் 2 வாரம் மட்டும் விளையாடலாமெனத் தெரிகிறது.

ஐ.பி.எல் போட்டி ஏப்ரல் 18 முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே மேற்கிந்தியத் தீவுகளில் அவுஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மே 30 ஆம் திகதி தொடங்குகிறது.

அதற்கு முன்னதாக மே 16 முதல் 18 ஆம் திகதி வரை பயிற்சி போட்டியில் அவுஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது. மே 8 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுக்கு புறப்படுகிறது.

அதற்கு முன்னதாக 6 நாள் பயிற்சி முகாமுக்கு அணிப் பயிற்சியாளர் ரிம் நீல்சன் ஏற்பாடு செய்துள்ளார். அதற்காக குயின்ஸ்லாந்தில் கூடுமாறும் வீரர்களைக் கேட்டுள்ளது அந்நாட்டு கிரிக்கெட் சபை.

இதனால் ஐ.பி.எல்.போட்டியில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்கள் திட்டமிட்டபடி பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Email this page Your Opinion Print this page
கிரீஸிலிருந்து விஷேட விமானம் மூலம் ஒலிம்பிக் தீபம் சீனாவை வந்தடைந்தது
ஆமதாபாத் டெஸ்டில் சச்சின் இல்லை 2 வருடத்திற்கு பின் மீண்டும் கைவ் வருகிறார்
சாதனைகள் பலவற்றுக்கும் வழிவகுத்த சென்னை டெஸ்ட் போட்டி
தோனி இந்திய கிரிக்கெட்டின் `ரஜினி' முன்னாள் கப்டன் ஷ்ரீகாந்த் புகழாரம்
இலங்கை- இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி அட்டவணை அறிவிப்பு
அடுத்து வரும் போட்டிகளில் தென்னாபிரிக்காவை வீழ்த்த அதிரடித் திட்டம் வகுக்க வேண்டும்
ஐ.பி.எல்; போட்டியில் அவுஸ்திரேலிய வீரர்கள் விளையாட முடியாத நிலை
அவுஸ்திரேலிய நீச்சல் வீரர் சல்லிவன் தனது உலக சாதனையை முறியடித்தார்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com