இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இலங்கை- இந்திய அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டி முதலில் காலியில் நடப்பதாக இருந்தது. ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதல் டெஸ்ட் போட்டி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் 2 ஆவது டெஸ்ட் காலியிலும் நடைபெறுகிறது.
போட்டி அட்டவணை வருமாறு;
டெஸ்ட் போட்டி
ஜூலை 18-20: 3 நாள் பயிற்சி ஆட்டம், கொழும்பு
ஜூலை 23-27: முதல் டெஸ்ட் கொழும்பு (எஸ்.எஸ்.சி.)
ஜூலை 31- ஆக. 4: 2 ஆவது டெஸ்ட் காலி
ஆக. 8-12: 3ஆவது டெஸ்ட் கொழும்பு (பிரேமதாச மைதானம்)
ஒருநாள் போட்டி
ஆக. 15: ஒரு நாள் பயிற்சி ஆட்டம், கொழும்பு
ஆக. 18: முதல் ஒரு நாள் ஆட்டம், தம்புள்ள
ஆக. 20: 2ஆவது ஒரு நாள் ஆட்டம், தம்புள்ள
ஆக. 24: 3ஆவது ஒரு நாள் ஆட்டம், கொழும்பு
ஆக. 26: 4ஆவது ஒரு நாள் ஆட்டம், கொழும்பு
ஆக. 29: 5ஆவது ஒரு நாள் ஆட்டம், கொழும்பு