*நோர்வே தூதரகப் பேச்சாளர்
ரொஷான் நாகலிங்கம்
புனித வணக்க தலங்களை பாதுகாப்பது போரில் ஈடுபடும் இரு தரப்பினரதும் கடமையாகுமென நோர்வே தூதரகப் பேச்சாளர் ரண்விக் ஸ்கொல்ரிலாண்ட் தெரிவித்துள்ளார்.
மடுதேவாலயப்பகுதி மீது இலங்கை அரச படைகள் மேற்கொள்கின்ற தாக்குதலை உடனடியாக நிறுத்த நோர்வே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் அந்நாட்டு சர்வதேச அபிவிருத்தியமைச்சருக்கு எழுதிய கடிதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதாவது மடுதேவாலயம் உட்பட புனித வணக்க தலங்களைப் பாதுகாப்பது போரில் ஈடுபடும் அரசு மற்றும் விடுதலைப் புலிகளின் பொறுப்பாகும்.
இந்த நிலையில் புலிகளின் கடிதத்தினை நாம் நோர்வே அரசுக்கு அனுப்பியுள்ளதுடன், இது தொடர்பில் இணைத்தலைமை நாடுகள் மற்றும் அரசுக்கும் தெரியப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.