இலங்கையின் நிகர தேசிய உற்பத்தி 7 சதவீதமாக இந்த வருடம் அதிகரிக்குமென மத்திய வங்கி தெரிவித்தது.
மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது.
2007 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்கின்றபோதும் தேயிலை, ரப்பர் ஏற்றுமதிகள் முன்னொருபோதுமில்லாத வகையில் கடந்த டிசம்பரில் 23 சதவீதம் அதிகரித்துள்ளன.
மோதல்கள் அதிகரித்துள்ளமையும் அதிக வட்டி வீதத்தாலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேயிலை, ரப்பர் ஏற்றுமதி அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்திருக்கிறது.
சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 2008 இல் இலங்கையின் பொருளாதாரம் 6 சதவீதமாக இருக்குமென எதிர்வுகூறியிருக்கும் நிலையில் அடுத்த வருட நிகர தேசிய உற்பத்தி 7 சதவீதமாக வளர்ச்சியடையுமென மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.