கசிப்பு உற்பத்தி தொழிற்சாலையை முற்றுகையிடுவதற்காக காட்டுப்பாதையூடகச்சென்ற பொலிஸ் கோஷ்டியின் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பொறிவெடியில் சிக்கியதால் படுகாயமடைந்த சம்பவம் எம்பிலிப்பிட்டிய பணாமுற என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது.
படுகாயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் எம்பிலிப்பிட்டிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் அதனைக்கண்டுபிடிக்க காட்டுப்பாதையூடாகச்சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றது.
இதனையடுத்து பொலிஸார் தமது நடவடிக்கையைக் கைவிட்டு திரும்பியுள்ளனர்.
கசிப்பு உற்பத்தி செய்வோரே இந்த பொறிவெடியை வைத்திருக்கலாம் எனவும், மேலும் பொறிவெடிகள் இங்கு இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.