Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
சுற்றாடல் பராமரிப்பு சட்டமூலத்தால் மனித கழிவுக்கும் வரி அறவிடும் ஆபத்து
[10 - April - 2008] [Font Size - A - A - A]
* சபையில் ஐ.தே.க, ஜே.வி.பி கடும் ஆட்சேபனை

சுற்றாடல் பராமரிப்பு சட்டமூலம் அவசரமாக சபையில் நிறைவேற்றப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானதெனவும் சட்டரீதியற்றதெனவும் ஐ.தே.க. வும் ஜே.வி.பி.யும் அரசாங்கத்தை மிகக் கடுமையாக குற்றம் சாட்டிய அதேவேளை, சூழல் பேணும் சட்டமூலத்தை மீண்டும் விவாதிக்க முடியாதெனவும் அது அரசியலமைப்புக்கு உட்பட்டதேயெனவும் ஆளும்தரப்பு வாதிட்டது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தப் போவதாக உலகை ஏமாற்றி மாகாண அதிகாரங்களை அரசாங்கம் திருட்டுத்தனமாக அபகரிக்க முயல்வதாகவும் ஐ.தே.க. குற்றஞ்சாட்டியதுடன் சூழல் பேணும் சட்டமூலம் மனித கழிவுக்கும் வரி அறவிடும் அபாயத்தை ஏற்படுத்துமெனவும் ஜே.வி.பி. தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஜே.வி.பி. எம்.பி. விஜித ஹேரத் சிறப்புரிமைப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

அவர் கூறியதாவது;

சூழல் பேணும் சட்டமூலம் தூக்கி வீசப்பட வேண்டியதொன்றாகும். செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நிலவிய குழப்பத்தைப் பயன்படுத்தி இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது. அரசியலமைப்புக்கு முரணானது. இச்சட்டமூலத்தை அமரர் ஜெயராஜ் கூட எதிர்த்தார். எனவே, சூழல் பேணும் சட்ட மூலத்தை மீண்டும் இச்சபைக்கு கொண்டு வந்து விவாதிக்க வேண்டுமென்றார்.

இச்சமயம் குறுக்கிட்ட சபை முதல்வர் நிமல் சிறிபால டீ சில்வா சூழல் பேணும் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. சட்டமூலத்தில் பிழைகள் இருந்திருந்தால் அதற்கெதிராக எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்றிருக்கலாம். இந்நிலையில், இச்சட்டமூலமும் அது நிறைவேற்றப்பட்ட விதமும் அரசியலமைப்புக்கு உட்பட்டதேயாகும். இதனை இச்சபையில் மீண்டும் விவாதிக்க முடியாதென்றார்.

இதன்போது குறுக்கிட்ட ஜே.வி.பி. எம்.பி.சுனில் ஹந்து நெத்தி இச்சட்டமூலம் நடைமுறைக்கு வந்தால் மனித கழிவுக்கும் வரி அறவிடப்படும். இச்சட்டமூலம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை சபாநாயகர் வாக்குறுதி வழங்கினார்.

சபாநாயகர் வாக்குறுதியில் எமக்கு நம்பிக்கையுள்ளது என்றார்.

லக்ஷ்மன் கிரியல்ல

இச்சமயம் கருத்துத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் கிரியெல்ல சூழல் பேணும் சட்டமூலத்திற்கு இதுவரை மாகாண சபைகளின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. 13 ஆவது திருத்தம் குறித்து உலகத்தை ஏமாற்றும் அரசாங்கம் மறுபுறம் மாகாண சபைக்குரிய அதிகாரத்தை திருட்டுத்தனமாக அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

எனவே, சூழல் பேணும் சட்டத்தை நாம் எதிர்க்கிறோம். இதனை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாதென்றார்.

இவ்வாறு ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் சூழல் பேணும் சட்டமூலம் தொடர்பில் பரஸ்பரம் சொற்போரிலும் சர்ச்சையில் ஈடுபடவே சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டதுடன் பார்வையாளர் கலரியிலிருந்த பொதுமக்களும் இவற்றை வேடிக்கை பார்த்தனர்.

இந்நிலையில் சபையின் ஒழுங்கைப் பேண உதவுமாறு எம்.பி.க்களை அறிவுறுத்திய சபாநாயகர் சட்டமா அதிபரிடமிருந்து இச்சட்டமூலம் தொடர்பில் தனக்கு அறிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

எனினும் இங்கு இருதரப்பு எம்.பி.க்களும் தெரிவித்த கருத்துகளை கவனத்திற் கொண்டேன். கடந்த காலத்திலும் சபையில் குழப்பநிலை நீடித்தபோதும் சில சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இருந்தபோதும் இதுபற்றி ஆராய்வேன்.

அதேவேளை, சூழல் பேணும் சட்டமூலத்திற்கு சபாநாயகர் என்ற வகையில் நான் இதுவரை கையொப்பமிடவில்லை என்றார். எனவே, சட்டமூலம் தொடர்பில் எவரும் அச்சப்படத் தேவையில்லை. நான் கையொப்பமிட்டாலே அது சட்டமூலமாகும் என்றார்.

சபாநாயகரின் இக்கூற்றையடுத்து எம்.பி.க்கள் அமைதியடைந்ததுடன் சபை நடவடிக்கைகளும் வழமைக்குத் திரும்பின.

Email this page Your Opinion Print this page
ஜெயராஜின் பூதவுடல் இன்று மாலை அரச மரியாதையுடன் நல்லடக்கம்
பொதுமக்களை பாதுகாக்க ஐ. நா. வேண்டுகோள்
இராணுவ நடவடிக்கையில் ஆலயங்களை சேதமாக்குவது தவிர்க்க முடியாதது; எல்லாவல தேரர் கூறுகிறார்
அதிரடிப்படை பதுங்கியிருந்து தாக்குதல் 2 இராணுவத்தினர், பொதுமகன் பலி
நிதிப்பரிமாற்றம் உட்பட வீரவன்ச மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள்
கிழக்கு தேர்தலின் முன்னோடியாக செயற்பட்டதால் ஜெயராஜ் படுகொலை
குருநகர் கடற்பரப்பில் ஷெல் தாக்குதல் மீனவர் பலி; பலர் மயிரிழையில் தப்பினர்
பிரேமச்சந்திரனின் வத்தளை இல்லத்தில் ஆயுதபாணிகள் அத்துமீறி சோதனை
நௌசாத், சிறில் புதிய எம்.பி.க்களாக பதவிப் பிரமாணம்
ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஞாபகார்த்த மேம்பாலம்
பொறுமையின் விளிம்பில் கிழக்கு மக்கள் புரிந்துகொள்ளத்தவறினால் விபரீத விளைவு
கடத்தப்பட்ட குடும்பஸ்தர் மதுரங்குளியில் விடுவிப்பு
மகா இறம்பைக்குளம் பாடசாலைக்கு அருகாமையில் சக்திமிக்க கிளைமோர்
யால தேசிய வனத்தில் இருவரைக் காணவில்லை
இடி மின்னல் தாக்கி இருவர் மரணம்
இன்றுமுதல் விசேட ரயில், பஸ் சேவை
`ஜெயசிக்குரு' படை நடவடிக்கை போன்று இன்று மன்னாரிலும் படையினர் சிக்குண்டுள்ளனர்
வவுனியாவில் தனிமையில் வாழ்ந்த யுவதி இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
புத்தளத்தில் நால்வரை கொலை செய்த ஊர்காவல் வீரர் ஆயுதத்துடன் சரண்
கிழக்கில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியநிலையில் எனது பாதுகாப்பை குறைப்பது எந்தவகையில் நியாயம்
இலங்கையில் ஊடக அடக்குமுறையை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் ஒருமைப்பாட்டு தினம் இன்று
78 மேலதிக வாக்குகளால் அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
`கொசோவோ போன்று தமிழீழப் பிரகடனமும் வெளியிடப்படும் நாள் விரைவில் உருவாகும்'
விசேட அதிரடிப்படையினரின் ஆயுதங்களை பார்த்தபோது ரவைக்கூடுகள் களையப்பட்டிருந்தன
வடமராட்சி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
முகமாலை கட்டளை அதிகாரி சினைப்பர் தாக்குதலில் காயம்
கதிர்காமத்தில் அதிக பாதுகாப்பு
அரசியல் இலாபம் கருதியதே மடு மீதான இராணுவ நடவடிக்கை
சுற்றாடல் பராமரிப்பு சட்டமூலத்தால் மனித கழிவுக்கும் வரி அறவிடும் ஆபத்து
பொறி வெடியில் சிக்கி பொலிஸ் சார்ஜன்ட் காயம்
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்
ஊர்காவல் படைவீரர் ஆலங்கேணியில் உயிரிழப்பு
நடப்பாண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7%
ஒஸ்லோ, இணைத் தலைமை நாடுகளுக்கு புலிகளின் கடிதம் தொடர்பாக அறிவிப்பு
அமைச்சர் ஜெயராஜின் கொலைக்கு மாத்தளை மாநகரசபையில் கண்டன தீர்மானம்
பாதுகாப்புச்சபை ஜனாதிபதி தலைமையில் நீண்டநேரம் கூடி ஆராய்வு
ஜெயராஜ் படுகொலையுண்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டை போலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com