யாழ். குடாநாட்டில் முகமாலைப் பகுதிக்குப் பொறுப்பான கட்டளை அதிகாரி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை விடுதலைப்புலிகளின் சினைப்பர் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை முகமாலைப் பகுதியில் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகளைப் பார்வையிடச் சென்றபோதே இவர் புலிகளின் சினைப்பர் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.
லெப். கேணல் தரத்தைச் சேர்ந்த இவர் உடனடியாக பலாலி இராணுவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முன்னரங்க நிலை பகுதியில் தினமும் இரு தரப்பும் சினைப்பர் தாக்குதல்கள் மூலம் மற்றமற்றத் தரப்புக்கு இழப்புகளை ஏற்படுத்தி வருவதும் தெரிந்ததே.
இந்தத் தாக்குதலையடுத்து சினைப்பர் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியை நோக்கிப் படையினர் கடும் ஷெல் தாக்குதலை நீண்டநேரம் நடத்தியுள்ளனர்.