வடமராட்சியில் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அருகில் `கன்ரர்' வாகனம் ஒன்றின் மீது இனந்தெரியாதோர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
திங்கட்கிழமை இரவு 7 மணியளவில் இப்பகுதியில் மணல் ஏற்றுவதற்காகச் சென்று கொண்டிருந்த `கன்ரர்' வாகனம் மீதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் மேற்படி பகுதியைச் சேர்ந்த கே.சுசிகாந்தன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக இவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.