இலங்கையில் ஊடக அடக்குமுறையை உடனடியாக நிறுத்தும்படி சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைமையில் இன்று ஏப்ரல் 10ம் திகதி உலகம் முழுவதும் எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளது.
இதன்படி உலகம் முழுவதும் பரந்துள்ள பெருந்தொகையான ஊடக அமைப்புகள் அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் இலங்கையில் ஊடக அடக்குமுறையை நிறுத்தக் கோரி மகஜர்களை கையளிக்கவுள்ளன.
"இலங்கையில் ஊடகங்களுக்கெதிரான அடக்குமுறையை உடன் நிறுத்து" என்ற சுலோகத்தை முன்வைத்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. எதிர்ப்பு நடவடிக்கைக்காக உலகம் முழுவதும் சுவரொட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.