புத்தளம் கருவெலகஸ்வெவ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரைப் படுகொலை செய்த, ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் நேற்று புதன்கிழமை அதிகாலை ஆயுதத்துடன் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை, கருவெலகஸ்வெவ பகுதியில் இகலபுளியங்குளத்திலுள்ள வீடொன்றினுள் புகுந்த, ஊர்காவல் படையைச் சேர்ந்த இவர் அங்கு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் கொல்லப்பட்டதுடன் நால்வர் படுகாயமடைந்தனர்.
வீட்டிலிருந்த 16 வயது யுவதியை கடத்திச் சென்ற இவர் அந்த யுவதியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நிலையில் இவரைத் தேடிச் சென்ற பொலிஸார் நவகஸ்தேகம காட்டுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அந்த யுவதியை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.
இந்த நிலையில், படுகொலையைச் செய்த அஜித் புஷ்பகுமார (39 வயது) என்ற இந்த ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் நேற்று அதிகாலை ஆயுதத்துடன் சென்று சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதேநேரம் பாதிக்கப்பட்ட யுவதி நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு பின்னர் அநுராதபுரம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.