Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
`ஜெயசிக்குரு' படை நடவடிக்கை போன்று இன்று மன்னாரிலும் படையினர் சிக்குண்டுள்ளனர்
[10 - April - 2008] [Font Size - A - A - A]
வட போர் முனையில் கடந்த ஒன்றரை வருட காலத்தில் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முன்னேற்ற முயற்சிகளையும் முறியடித்து எல்லைக்கோட்டில் ஒரு அங்குலத்தைக்கூட எதிரியிடம் விட்டுக்கொடுக்காது ஓர்மத்துடன் போராடி வருவதாக விடுதலைப்புலிகளின் வட போர் முனைக் கட்டளைத்தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார்.

வட போர் முனையில் நடந்த சண்டைகளில் சிறப்பாக செயற்பட்ட போராளிகளுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு போராளிகள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததாக இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

கடந்த ஒன்றரை வருட காலத்தில் வடபோர் முனையில் எதிரியால் தொடுக்கப்பட்ட எல்லாவிதமான தாக்குதல்களையும் எதிர்கொணடு முறியடித்து நாங்கள் எங்களுடைய மண்ணிலே, இந்தப் பிரதேசத்திலே ஒரு அங்குலம் கூட எதிரியை நகர விடாது உறுதியோடு போராடி வருகின்றோம்.

வட போர் முனையிலே நாம் எதிரிக்கு மிகவும் சவாலாக நின்று கொண்டிக்கிறோம். எத்தகைய சவால்கள் வந்தாலும் அதை முறியடித்து எதிரிக்கு மிகப் பெரிய தாக்கத்தைக் கொடுப்போம் என்ற உறுதியுடன் நீங்கள் இந்தக் களத்தில் களமாடிக்கொண்டிருக்கிறீர்கள்.

இராணுவம் எமது தாயக நிலப்பரப்புகளை அபகரிப்பதற்காகப் பல களமுனைகளை திறந்து பேச்சளவில் முன்னேறுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார் கள முனையிலே யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அதே போன்று வவுனியா, மணலாறு வடபோர் முனைகளிளிலும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.

எதிரி மிகப் பெரிய திட்டங்களை போட்டு எமது நிலப்பரப்பை ஆக்கிரமிக்க நாளுக்கு நாள் புதிய திட்டங்களை போட்டு நுழைவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு கள முனைகளிலும் எதிரியை முன்னேற விடாது உங்களைப் போன்ற உங்களோடு இணைந்து கொண்ட போராளிகளே போராடிக்கொண்டிருக்கிறார்கள். அங்கு ஒவ்வொரு நாளும் சண்டை நடந்துக் கொண்டிருக்கிறது.

இன்று இராணுவம் என்ன செய்வதென்ற நிலையில் தனது நடவடிக்கையைச் செய்து கொண்டிருக்கிறது. அவர்கள் எதிர்ப்பார்த்தது "இங்கு புலிகள் இல்லை பூனைகளும் எலிகளும் தான் இருக்கிறது " குறுகிய காலத்தில் வன்னி நிலப்பரப்பை மீட்டு முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியுமென்றே நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

எங்களுடைய மண்ணை மக்களை நாங்கள் பாதுகாக்க வேண்டுமென்று சொன்னால் நாங்கள் ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் அர்பணிப்புக்கள் இன்று நடந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வீரனின் சாவுக்கு முன்னாலும் ஏகப்பட்ட எதிரிகள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று ஒரு பெயர் வைக்கப்படாத இராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. "ஜெயசிக்குறு" என்று சொல்லப்படுகின்ற ஒரு பெரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையை 1997 ஆம் ஆண்டு நடாத்தி வன்னியைத் துண்டாடி யாழ்ப்பாணத்துக்கான தரை வழிப் பாதையைத் திறப்பதற்கான திட்டம் ஒன்றரை வருடம் நீடித்தது. பின் எமது தேசியத் தலைவரின் திட்டத்தால் ஒரு வாரத்திற்குள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டன. அப்படியான வரலாற்றைப் படைத்தவர்கள் தான் விடுதலைப் புலிகள். அதே போன்ற நடவடிக்கையைத் தான் இன்று எதிரிகள் மன்னாரிலும் மேற்கொண்டுள்ளனர்.

ஜெயசிக்குறு போன்றே மன்னாரிலும் இராணுவம் சிக்குப்படத் தொடங்கியுள்ளது. இந்தக் காலம், இந்த நேரம், இந்தக் கணம், இனிவருகின்ற அந்தக் காலம், சிக்குப்பட்ட எதிரியை நாங்கள் வேகமாக நின்று வெல்ல வேண்டிய காலமாக இருக்கின்றது.

2006 ஆம் ஆண்டு சமாதானத்தை முறித்துக் கொண்டு சண்டையைத் தொடங்கினர். அதற்கு எதிராக நாங்கள் மிகக் கடுமையாகப் போரிட்டோம். போரிட்டுக் கொண்டே இருக்கிறோம். வெற்றிகள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதற்காக நாங்கள் உழைத்து கொண்டிருக்கிறோம். எனவே இனிவரும் காலங்கள் எங்களின் அர்ப்பணிப்பு நிறைந்த காலங்களாக இருக்க வேண்டியுள்ளது.

தரை வழியாக நகர்ந்து எங்கள் பாதுகாப்பு அரணை உடைத்து உள்நுழைய முடியாதவர்கள் இப்போது கவசப் படையணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். ஆனால், எந்தப் படைக்கும் நாம் அஞ்சப் போவதில்லை ஏனென்றால் எங்களிடம் வீரம் இருக்கிறது. எங்களிடம் உறுதியிருக்கின்றது. நாங்கள் விடுதலைக்காகப் போராடும் வீரர்கள் எங்களுடைய மண்ணில் யாரையும் அனுமதிக்க மாட்டோம். அந்த உறுதி எங்களிடம் இருக்கின்றது என்றார்.

Email this page Your Opinion Print this page
ஜெயராஜின் பூதவுடல் இன்று மாலை அரச மரியாதையுடன் நல்லடக்கம்
பொதுமக்களை பாதுகாக்க ஐ. நா. வேண்டுகோள்
இராணுவ நடவடிக்கையில் ஆலயங்களை சேதமாக்குவது தவிர்க்க முடியாதது; எல்லாவல தேரர் கூறுகிறார்
அதிரடிப்படை பதுங்கியிருந்து தாக்குதல் 2 இராணுவத்தினர், பொதுமகன் பலி
நிதிப்பரிமாற்றம் உட்பட வீரவன்ச மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள்
கிழக்கு தேர்தலின் முன்னோடியாக செயற்பட்டதால் ஜெயராஜ் படுகொலை
குருநகர் கடற்பரப்பில் ஷெல் தாக்குதல் மீனவர் பலி; பலர் மயிரிழையில் தப்பினர்
பிரேமச்சந்திரனின் வத்தளை இல்லத்தில் ஆயுதபாணிகள் அத்துமீறி சோதனை
நௌசாத், சிறில் புதிய எம்.பி.க்களாக பதவிப் பிரமாணம்
ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஞாபகார்த்த மேம்பாலம்
பொறுமையின் விளிம்பில் கிழக்கு மக்கள் புரிந்துகொள்ளத்தவறினால் விபரீத விளைவு
கடத்தப்பட்ட குடும்பஸ்தர் மதுரங்குளியில் விடுவிப்பு
மகா இறம்பைக்குளம் பாடசாலைக்கு அருகாமையில் சக்திமிக்க கிளைமோர்
யால தேசிய வனத்தில் இருவரைக் காணவில்லை
இடி மின்னல் தாக்கி இருவர் மரணம்
இன்றுமுதல் விசேட ரயில், பஸ் சேவை
`ஜெயசிக்குரு' படை நடவடிக்கை போன்று இன்று மன்னாரிலும் படையினர் சிக்குண்டுள்ளனர்
வவுனியாவில் தனிமையில் வாழ்ந்த யுவதி இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
புத்தளத்தில் நால்வரை கொலை செய்த ஊர்காவல் வீரர் ஆயுதத்துடன் சரண்
கிழக்கில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியநிலையில் எனது பாதுகாப்பை குறைப்பது எந்தவகையில் நியாயம்
இலங்கையில் ஊடக அடக்குமுறையை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் ஒருமைப்பாட்டு தினம் இன்று
78 மேலதிக வாக்குகளால் அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
`கொசோவோ போன்று தமிழீழப் பிரகடனமும் வெளியிடப்படும் நாள் விரைவில் உருவாகும்'
விசேட அதிரடிப்படையினரின் ஆயுதங்களை பார்த்தபோது ரவைக்கூடுகள் களையப்பட்டிருந்தன
வடமராட்சி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
முகமாலை கட்டளை அதிகாரி சினைப்பர் தாக்குதலில் காயம்
கதிர்காமத்தில் அதிக பாதுகாப்பு
அரசியல் இலாபம் கருதியதே மடு மீதான இராணுவ நடவடிக்கை
சுற்றாடல் பராமரிப்பு சட்டமூலத்தால் மனித கழிவுக்கும் வரி அறவிடும் ஆபத்து
பொறி வெடியில் சிக்கி பொலிஸ் சார்ஜன்ட் காயம்
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்
ஊர்காவல் படைவீரர் ஆலங்கேணியில் உயிரிழப்பு
நடப்பாண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7%
ஒஸ்லோ, இணைத் தலைமை நாடுகளுக்கு புலிகளின் கடிதம் தொடர்பாக அறிவிப்பு
அமைச்சர் ஜெயராஜின் கொலைக்கு மாத்தளை மாநகரசபையில் கண்டன தீர்மானம்
பாதுகாப்புச்சபை ஜனாதிபதி தலைமையில் நீண்டநேரம் கூடி ஆராய்வு
ஜெயராஜ் படுகொலையுண்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டை போலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com