தமிழ் - சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ரயில்வே திணைக்களம் இன்று முதல் விசேட சேவைகளை மேற்கொள்ளவுள்ளது.
பண்டிகைக்காக வவுனியா, மாத்தறை, பதுளை, ஹற்றன், மற்றும் கண்டிக்கான விசேட சேவைகளை ரயில்வே திணைக்களம் மேற்கொள்ளவுள்ளதாக அதன் பொதுமுகாமையாளர் பேராசிரியர் லலித் சிறி குருவான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பிலிருந்து பிறமாவட்டங்களுக்கான விசேட சேவையை தனியார் பஸ்கள் மேற்கொள்ளாதென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்ததுடன் வழமையான சேவைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை பயணிகளுக்கு ஏற்ற வகையில் விசேட சேவைகளை மேற்கொள்ளவிருப்பதாலேயே தாம் இந்த முடிவினை மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.