|
இடி மின்னல் தாக்குதலால் பேக்கரியில் வேலை செய்துகொண்டிருந்த இரு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம், வாரியப்பொலவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
மொஹமட் நிசாம்தீன் (54 வயது), மொஹமட் நிசாம் (22 வயது) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.
இருவரின் சடலங்களும் மேல் விசாரணைக்காக குருநாகல் ஆஸ்பத்திரி சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன. |