வவுனியா மகா இறம்பைக்குளம் பாடசாலைக்கு அருகில் நேற்று புதன்கிழமை பிற்பகல் சக்திமிக்க கிளைமோர் குண்டொன்றை படையினர் கண்டெடுத்துள்ளனர்.
கருப்பனிச்சங்குளம் வீதியால் பிற்பகல் 2 மணியளவில் ஒருவர் இந்தக் கிளைமோரை எடுத்து வந்ததாகவும் பொலிஸாரைக் கண்டதும் அதனை அவர் வீதியோரத்தில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், அப்பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார் அந்தக் கிளைமோரைக் கண்டெடுத்து செயலிழக்க செய்துள்ளனர்.
அப்பகுதியில் தேடுதலும் நடத்தப்பட்டுள்ளது.