நௌசாத், சிறில் புதிய
எம்.பி.க்களாக பதவிப் பிரமாணம்
|
| [10 - April - 2008] [Font Size - A - A - A] |
|
|
பாராளுமன்றத்தில் இரு புதிய எம்.பி.க்கள் நேற்று புதன்கிழமை சபாநாயகர் வி.ஜே.மு.லொக்குபண்டார முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.
எம்.பி.பதவியை ராஜிநாமா செய்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் வெற்றிடத்திற்கு எம்.நௌசாத்தும், கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட கி.சிவநேசனின் வெற்றிடத்திற்கு சொலமன் சிறிலும் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் நேற்று சபாநாயகர் முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பதவியேற்றபோது அவர்களின் உறவினர்களும் கலரியில் அமர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. எம்.பி.க்கள் இருவரும் பதவியேற்ற பின்னர் சபையில் அவர்களுக்கு வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது. |
|