Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, April 10, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
இராணுவ நடவடிக்கையில் ஆலயங்களை சேதமாக்குவது தவிர்க்க முடியாதது; எல்லாவல தேரர் கூறுகிறார்
[10 - April - 2008] [Font Size - A - A - A]
* மடு, கோணேஸ்வரம், கேதீஸ்வரம் பௌத்தர்களின் புனிதப் பிரதேசங்கள்

மடு தேவாலயம், திருக்கோணேஸ்வரம் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலயங்கள் பௌத்தர்களின் புனித பிரதேசங்களென தொல்பொருள் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த ஹெல உறுமய எம்.பி. எல்லாவல மேதானந்த தேரர், இராணுவ நடவடிக்கையின்போது ஆலயங்களும் தேவாலயங்களும் சேதமாக்கப்படுவது தவிர்க்கப்பட முடியாதெனவும் இதனை பொருட்படுத்த தேவையில்லையெனவும் மேலும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டப்பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றய அவர் மேலும் தெரிவித்ததாவது;

"ஜெயராஜின் படுகொலை பாராளுமன்றத்தை சோபையிழக்கச் செய்துள்ளது. எனினும் பிரபாகரனின் குண்டுகளினால் இப்பாராளுமன்றத்தை மௌனமாக்கிவிட முடியாது. அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

ஜெயராஜ் வெலிவேரியாவில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இப்பிரதேசத்தில் வசித்தவரே இராணுவத் தளபதி மீதும் தாக்குதல் மேற்கொண்டார். எனவே, அரசாங்கம் வெலிவேரிய பிரதேசம் மீது கூடிய அவதானம் செலுத்த வேண்டும்.

தமிழ் மக்கள் இன்று வரலாற்றை திரிபுபடுத்துகின்றனர். திருமலை கோணேஸ்வரர் ஆலயம், மாந்தை திருக்கேதீஸ்வர ஆலயம் ஆகியன பௌத்த விகாரைகளை இடித்தே கட்டப்பட்டதாக வரலாற்று ஆவணங்கள் சான்று பகிர்கின்றன.

இவ்வாறே கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் பூர்வீகப் பிரதேசங்கள் ஏனைய சமூகங்களினால் அபகரிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தன் போன்ற எம்.பி.க்கள் வரலாற்றை திரிபுபடுத்தும் செயற்பாட்டில் ஈடுபடக்கூடாது. இதனை நாம் கண்டிக்கிறோம்.

இன்று சிலர் மதங்களுக்கிடையே யுத்தத்தை ஏற்படுத்த முயலுகின்றனர். இதில் எவரும் சிக்கிவிடக்கூடாது.

மடு தேவாலயத்தை புலிகள் அழித்துவிட்டு பழியை இராணுவத்தினர் மீது போட நடவடிக்கை மேற்கொண்டனர்.இது பலனளிக்காத நிலையிலேயே, அங்குள்ள சொரூபத்தை புலிகளின் பிரதேசத்திற்கு கொண்டு சென்றதன் மூலம் மன்னார் ஆயர் தவறிழைத்துள்ளார். இது கண்டிக்கப்பட வேண்டியது.

மடு தேவாலயம் கூட பௌத்தர்களுக்கு சொந்தமானதேயாகும். தேவாலயத்தில் புனித பௌத்த சின்னங்கள் காணப்பட்டதை தொல்பொருள் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.

தேசத்தை பாதுகாத்து, பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் இராணுவ நடவடிக்கையின்போது இந்துக் கோயில்களோ கிறிஸ்தவ ஆலயமோ சேதமாகுவது தவிர்க்கமுடியாதது. இதனை பொருட்படுத்தத் தேவையில்லை".

Email this page Your Opinion Print this page
ஜெயராஜின் பூதவுடல் இன்று மாலை அரச மரியாதையுடன் நல்லடக்கம்
பொதுமக்களை பாதுகாக்க ஐ. நா. வேண்டுகோள்
இராணுவ நடவடிக்கையில் ஆலயங்களை சேதமாக்குவது தவிர்க்க முடியாதது; எல்லாவல தேரர் கூறுகிறார்
அதிரடிப்படை பதுங்கியிருந்து தாக்குதல் 2 இராணுவத்தினர், பொதுமகன் பலி
நிதிப்பரிமாற்றம் உட்பட வீரவன்ச மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள்
கிழக்கு தேர்தலின் முன்னோடியாக செயற்பட்டதால் ஜெயராஜ் படுகொலை
குருநகர் கடற்பரப்பில் ஷெல் தாக்குதல் மீனவர் பலி; பலர் மயிரிழையில் தப்பினர்
பிரேமச்சந்திரனின் வத்தளை இல்லத்தில் ஆயுதபாணிகள் அத்துமீறி சோதனை
நௌசாத், சிறில் புதிய எம்.பி.க்களாக பதவிப் பிரமாணம்
ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே ஞாபகார்த்த மேம்பாலம்
பொறுமையின் விளிம்பில் கிழக்கு மக்கள் புரிந்துகொள்ளத்தவறினால் விபரீத விளைவு
கடத்தப்பட்ட குடும்பஸ்தர் மதுரங்குளியில் விடுவிப்பு
மகா இறம்பைக்குளம் பாடசாலைக்கு அருகாமையில் சக்திமிக்க கிளைமோர்
யால தேசிய வனத்தில் இருவரைக் காணவில்லை
இடி மின்னல் தாக்கி இருவர் மரணம்
இன்றுமுதல் விசேட ரயில், பஸ் சேவை
`ஜெயசிக்குரு' படை நடவடிக்கை போன்று இன்று மன்னாரிலும் படையினர் சிக்குண்டுள்ளனர்
வவுனியாவில் தனிமையில் வாழ்ந்த யுவதி இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்பு
புத்தளத்தில் நால்வரை கொலை செய்த ஊர்காவல் வீரர் ஆயுதத்துடன் சரண்
கிழக்கில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டியநிலையில் எனது பாதுகாப்பை குறைப்பது எந்தவகையில் நியாயம்
இலங்கையில் ஊடக அடக்குமுறையை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்கும் ஒருமைப்பாட்டு தினம் இன்று
78 மேலதிக வாக்குகளால் அவசரகால நீடிப்புக்கு சபை அங்கீகாரம்
`கொசோவோ போன்று தமிழீழப் பிரகடனமும் வெளியிடப்படும் நாள் விரைவில் உருவாகும்'
விசேட அதிரடிப்படையினரின் ஆயுதங்களை பார்த்தபோது ரவைக்கூடுகள் களையப்பட்டிருந்தன
வடமராட்சி துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்
முகமாலை கட்டளை அதிகாரி சினைப்பர் தாக்குதலில் காயம்
கதிர்காமத்தில் அதிக பாதுகாப்பு
அரசியல் இலாபம் கருதியதே மடு மீதான இராணுவ நடவடிக்கை
சுற்றாடல் பராமரிப்பு சட்டமூலத்தால் மனித கழிவுக்கும் வரி அறவிடும் ஆபத்து
பொறி வெடியில் சிக்கி பொலிஸ் சார்ஜன்ட் காயம்
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய உத்தரவிடுமாறு ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்
ஊர்காவல் படைவீரர் ஆலங்கேணியில் உயிரிழப்பு
நடப்பாண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 7%
ஒஸ்லோ, இணைத் தலைமை நாடுகளுக்கு புலிகளின் கடிதம் தொடர்பாக அறிவிப்பு
அமைச்சர் ஜெயராஜின் கொலைக்கு மாத்தளை மாநகரசபையில் கண்டன தீர்மானம்
பாதுகாப்புச்சபை ஜனாதிபதி தலைமையில் நீண்டநேரம் கூடி ஆராய்வு
ஜெயராஜ் படுகொலையுண்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டை போலி
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com