ஐரோப்பிய நாடொன்றில் வேலை செய்வதற்காக இளைஞர் குழுவொன்று குதூகலத்துடன் சென்றது. இவர்களிடம் தொழில் பெர்மிட் இருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் அங்கு சென்றனர்.
முகவர் அந்நாட்டின் ஒரு முக்கிய நகரைக் குறிப்பிட்டு அங்கு தான் வேலை செய்யப் போகிறீர்கள் என்று கூறியிருந்தார். கணிசமான தொகையையும் வசூலித்துவிட்டார்.
இந்த இளைஞர்கள் குறிப்பிட்ட நகரத்தில் இறங்கினார்களே தவிர அங்கு வேலைக்கு அமர்த்தப்படவில்லை. மாறாக எங்கோ மனித சஞ்சாரம் குறைந்த ஓர் இடத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கு அடிப்படை வசதிகளை இவர்கள்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.!
ஆகவே வெளிநாட்டில் நகரத்தில் அல்லது பட்டினத்தில் வேலை கிடைக்கும் என்று எவராவது சொன்னால் இலகுவில் நம்பிவிடாதீர்கள்.