Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
பிரான்ஸிலும் ஒலிம்பிக் தீப ஊர்வலத்திற்கு இடையூறு
[11 - April - 2008] [Font Size - A - A - A]
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தீப ஊர்வலத்திற்கு திபெத் ஆதரவாளர்கள் இடையூறு விளைவித்துள்ளனர்.

இதனால் ஒலிம்பிக் தீபத்தை மூன்று முறை அணைக்க வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 3,000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதும் ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து தீபத்தை பாதுகாக்கும் வகையில் தீபத்தை பஸ்ஸில் கொண்டு செல்லும் நிலை ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இறுதியாக வந்த தகவல்களின் படி, பாரிஸின் நகர மண்டபத்தில் ஒலிம்பிக் தீபம் சம்பந்தமாக நடக்கவிருந்த வைபவம் ஒன்று ஆர்ப்பாட்டக்காரர்களின் இடையூறு காரணமாக இரத்துசெய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை லண்டனில் சுடரின் இந்த பயணம் இடம்பெற்ற போது அங்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையூறு விளைவித்தனர்.

லண்டனில் நடந்த திபெத் ஆதரவு ஆர்ப்பாட்டங்களை பிரிவினைவாதிகளின் சீர்குலைவு நவடிக்கை என்று சீன அரசாங்கம் விபரித்திருந்தது.

Email this page Your Opinion Print this page
கொசோவோவின் புதிய அரசியலமைப்புக்கு பாராளுமன்றம் ஏகமனதாக அங்கீகாரம்
தென்கொரிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சி வெற்றி
இஸ்லாத்தை அவமதித்தமைக்காக பாகிஸ்தானில் இந்து இளைஞர் அடித்துக் கொலை
தேர்தல் முடிவுகளை வெளியிடுவது ஆபத்தானதென சிம்பாப்வே தேர்தல் ஆணையகம் தெரிவிப்பு
எதிர்க்கட்சிகளின் பலம் அதிகமென்பதால் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதை தவிர்த்தார் முஷாரப்
ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் புஷ் கலந்துகொள்வாரென அறிவிப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸி தேர்தல் உறுதிமொழிகளை மீறியுள்ளதாக தலிபான்கள் குற்றச்சாட்டு
பிரான்ஸிலும் ஒலிம்பிக் தீப ஊர்வலத்திற்கு இடையூறு
முஷாரப் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com