Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, April 11, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Foreign News
தென்கொரிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சி வெற்றி
[11 - April - 2008] [Font Size - A - A - A]
தென்கொரியாவின் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சி குறைந்தளவு வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்றுள்ளது.

நாட்டின் தேர்தல் ஆணையகம் வெளியிட்ட ஆரம்பகட்ட முடிவுகளின்படி 299 ஆசனங்களில் 153 ஆசனங்களை இக்கட்சி வென்றுள்ளது.

இவ் வெற்றியானது புதிய ஜனாதிபதி லி-மியுங்- பாக் தனது பொருளாதார சீர்திருத்தங்களை இலகுவாக முன்னெடுப்பதற்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிதாக வெளியிடப்பட்ட முடிவுகளின் பிரகாரம் கன்சர்வேர்டிவ் கட்சி மாவட்ட ரீதியில் 131 இடங்களையும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் 22 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் முன்னர் பெரும்பான்மை பலத்தை பெற்றிருந்த ஐக்கிய ஜனநாயகக் கட்சி 81 ஆசனங்களை இதுவரை கைப்பற்றியுள்ளதுடன் இது 100 ஆசனங்களை வெல்லுமென எதிர்பார்க்கப்படுகிறது.

எஞ்சிய ஆசனங்களை சிறிய கட்சிகளும் சுயாதீன வேட்பாளர்களும் பகிர்ந்துள்ளனர்.

தேசிய ஐக்கியம் மற்றும் பொருளாதார சீர்திருத்தம் என்பவற்றிற்காகவே மக்கள் தமக்கு வாக்களித்திருப்பதாக கன்சர்வேர்டிவ் கட்சியின் காங்- ஜாயி சப் தெரிவித்துள்ளார்.

Email this page Your Opinion Print this page
கொசோவோவின் புதிய அரசியலமைப்புக்கு பாராளுமன்றம் ஏகமனதாக அங்கீகாரம்
தென்கொரிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேர்டிவ் கட்சி வெற்றி
இஸ்லாத்தை அவமதித்தமைக்காக பாகிஸ்தானில் இந்து இளைஞர் அடித்துக் கொலை
தேர்தல் முடிவுகளை வெளியிடுவது ஆபத்தானதென சிம்பாப்வே தேர்தல் ஆணையகம் தெரிவிப்பு
எதிர்க்கட்சிகளின் பலம் அதிகமென்பதால் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதை தவிர்த்தார் முஷாரப்
ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் புஷ் கலந்துகொள்வாரென அறிவிப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி சார்கோஸி தேர்தல் உறுதிமொழிகளை மீறியுள்ளதாக தலிபான்கள் குற்றச்சாட்டு
பிரான்ஸிலும் ஒலிம்பிக் தீப ஊர்வலத்திற்கு இடையூறு
முஷாரப் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினால் பாகிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுக்கும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com