வடக்கு- கிழக்கில் கடந்த மார்ச் மாதத்தில் 18 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 20 பேர் காணாமல் போயிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் அறிவித்துள்ளது.
அரச படைகளும் அவர்களுடன் இணைந்து செயற்படும் ஆயுதக் குழுக்களுமே இவற்றுக்குக் காரணமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக புள்ளி விபரங்களுடன் சமாதான செயலகத்தின் மாதாந்த அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. மன்னாரில் கடலுக்கு தொழிலுக்குச் சென்ற போது காணாமல் போன 10 கடற்றொழிலாளர்களும் இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இதேநேரம், தமிழர் தாயகத்திற்கு வெளியே அரச படைகளாலும் துணைப் படைக் குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.