யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களுக்கு நியாய விலையில் சீமெந்தை பெற்றுக் கொடுக்க சீமெந்துக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வர்த்தகர்களால் கப்பல் மூலம் எடுத்துவரப்படும் சீமெந்துக்கு கப்பல் கட்டணம், இறக்கும் ஏற்றும் கூலி , சேதாரம் , தாமதம் போன்ற காரணங்களால் ஒரு பைக்கற் சீமெந்தின் விலை 1500 ரூபா முதல் 2200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு பைக்கற் சீமெந்தை 1200 ரூபாவுக்கு விற்பனை செய்ய வேண்டும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் யாழ். அரசாங்க அதிபர் ஊடாக வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தியிருந்தும் இதனை ஏற்காமல் கடந்த மூன்று வருடங்களாக அதிக விலைக்கே சீமெந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனையடுத்து கூட்டுத்தாபனம் புதிய வர்த்தகர்களை தெரிவு செய்து நியாய விலையில் சீமெந்தை விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளது.
அதிக விலையில் சீமெந்து விற்கப்படுவதால் பல கட்டட வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.